தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

சிறந்த தோல்வியாளர் யாரென உங்களால் அறிந்துக்கொள்ள முடியும்: மகிந்தரின் கிண்டல் !

இது ஒரு ஜனநாயக அரசாங்கமல்லவா ? எனக்கு ஆறு வருடங்களுக்கு அதிகாரத்தை வழங்கினர். ஆனால் பல்வேறுபட்ட தரப்பினர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று என்னைப் பற்றி குறைகூறுகின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று நான் எதுவும் செய்வதில்லை எனக் கூறி, என்னைப்பற்றி குறைகூறுகின்றனர். நான் என்ன செய்துள்ளேன் என்பதை உங்களால் பார்க்கமுடியும். என்னுடன் யார் போட்டியிட வருகிறார் என்பதை காண முழு நாடுமே ஆர்வத்துடன், காத்திருந்ததை நான் கடந்த சில நாட்களாக அவதானித்தேன்.
இதுவரை இந்த கோதாவிற்கு யாரும் வரவில்லை. நான் நினைக்கின்றேன் இனிவரும் நாட்களிலாவது சிறந்த தோல்வியாளர் யாரென உங்களுக்கு அறிந்துக்கொள்ள முடியும். யாரென்பது எனக்கு தெரியாது. அது இரகசியம். அது மக்களுக்கும் இரகசியம். அவர்களுக்கும் இரகசியமாகும். காரணம் அவர்களுக்கு இதுவரை தீர்மானிக்க முடியவில்லை. இவ்வாறு செயற்படும் போது நாட்டை முன்னேற்ற முடியுமா ? தமது கட்சிக்குள் ஒன்றிணைந்து தீர்மானமொன்றுக்கு வருவதன் மூலம், தலைவர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாமல் எதிர் கட்சி திண்டாடுகிறது. இன் நிலையில் அவர்களால் நாட்டை எப்படி கொண்டு நடத்த முடியும். என்று மகிந்தர் கிண்டலடித்துள்ளார் !

Geen opmerkingen:

Een reactie posten