தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்புக்கு விஜயம்!!

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல: விமல் வீரவன்ச
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 08:04.00 AM GMT ]
காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும்.
அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும் காரணியல்ல. ராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் எஹலபொல நிலமே துரோகம் இழைத்திருந்தார்.
பின்னர் அந்த எஹலபொல சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்ள பலிக் கடா ஒன்றை தேடுகின்றார்.
கடந்த 2010ம் ஆண்டிலும் இவ்வாறான ஓர் பலிக்கடாவாக சரத் பொன்சேகா மாற்றப்பட்டார்.
சரத்பொன்சேகாவிற்கு தற்போது புத்தி ஏற்பட்டுள்ளது.
அவரது அண்மைக்கால அறிக்கைகளின் மூலம் அந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
தற்போது பலிக்கடாவாக துடிக்கும் நபர் எதிர்வரும் ஏப்ரல் மே மாதமளவில் தெளிவு பெற்றுக்கொள்வார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் பிளவு ஏற்படப் போவதனையே விமல் வீரவன்சவின் கூற்று உணர்த்தி நிற்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht2.html
பொது வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் ரணிலுக்கு - மைத்திரிபாலவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஐ.தே.க.வின் ஜீ.20 குழு தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 08:47.48 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பொது வேட்பாளர் வேறு கட்சியில் இருந்து நிறுத்தப்பட்டால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது.
இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புகள் கிளப்பாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு கட்சியில் இருந்து வரும் முக்கியஸ்தராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்ப்பை வெளியிடவில்ரல என தெரியவருகிறது.
மைத்திரிபாலவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஐ.தே.கவின் ஜீ.20 குழு தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜீ-20 குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என ஜீ-20 குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக ஜீ-20 குழுவினை ஐக்கிய தேசியக் கட்சி நிறுவியுள்ளது.
இந்தக் குழுவினரே ஜனாதிபதி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று கட்சித்தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது யாரை நிறுத்துவதுஅல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht3.html

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்புக்கு விஜயம்!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 08:51.05 AM GMT ]
அமெரிக்காவின் இராஜாங்க  திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் தமிழ் மற்றும் முஸ்லிம் முக்கியஸ்தர்களையும் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் எஸ்.கமலதாஸ் தலைமையில் அதன் உறுப்பினர்களை கல்லடி அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் சந்தித்தித்தனர்
 மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் ஆரையம்பதி முக்கியஸ்தர்கள், சர்வமத முக்கியஸ்தர்கள், மதப் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி நடவடிக்கைகள், இன நல்லுறவு பற்றி அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமான உறவு என்றும் நிலைத்திருக்கும். மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க  திணைக்கள அதிகாரிகள் கூறியதாக மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் எஸ்.கமலதாஸ் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க  திணைக்கள அதிகாரிகளான பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் மாலைதீவுக்கான காரியாலயத்தின் பணிப்பாளர் திருமதி கிளின்டன் எஸ்.ராட் பிறவுன் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் விவகாரங்களுக்கு  பொறுப்பான பிரதி தலைவர் சியோபான் ஓட் ஐட்ஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், அதன் நல்லிணக்கக்குழு  தலைவர் யு.எல்.எம்.என்.முபீன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா தலைமையிலான சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளையும் தனித்தனியே இவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht4.html

Geen opmerkingen:

Een reactie posten