தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடங்கல்! அரசின் அராஜக செயலுக்கு ஊடக அமைப்பு கடும் கண்டனம்

மைத்திரியின் செயல் சிறுபிள்ளைத்தனம்! வரவு செலவுத் திட்டம்! அரசு வெற்றி பெறும்!- தினேஸ்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:02.54 AM GMT ]
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் இலகு வெற்றியீட்டும் என நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு பாரிய வாக்கு வித்தியாசத்தினால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்.
இன்று நடைபெறவுள்ள மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை தோற்கடிக்க சதிகாரர்கள் முயற்சிக்கின்றனர். எனினும், இந்த சதி முயற்சி வெற்றியளிக்காது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாக்கெடுப்பில் மட்டுமன்றி, ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் போன்ற அனைத்திலும் ஆளும் கட்சி இலகு வெற்றியீட்டும்.
அதிகார ஆசை கொண்ட அரசியல்வாதிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன எடுத்தத் தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மத்துகம பிரதேசத்தில் நீர் விநியோகத் திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmszBRYKYfp4.html

சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடங்கல்! அரசின் அராஜக செயலுக்கு ஊடக அமைப்பு கடும் கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 11:30.27 PM GMT ]
சிரச தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான சடன நிகழ்ச்சிக்கு தடங்கல் ஏற்படுத்தியது தொடர்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமன் வக ஆராச்சி தலைமையிலான குறித்த அமைப்பு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக நசுக்கி வருகின்றது. பொதுமக்களுககுத் தகவல்கள் சென்றடைவதை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே சடன நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் சிரச தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் மட்டுமன்றி, பொதுமக்களை அச்சுறுத்தும் செயலுக்கும் ஒப்பானதாகும்.
தேசிய மட்ட தேர்தல் ஒன்றை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில் இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்.
மேலும் அரசாங்கத்தின் இந்த அராஜகச் செயல் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறையிடவுள்ளோம் என்றும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfp2.html

Geen opmerkingen:

Een reactie posten