மகிந்தருக்கு நேரம் கணித்துக் கொடுத்த யோசியர் ஒருவேளை பிழை விட்டுவிட்டாரோ தெரியவில்லை !
[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 8995 ]
மகிந்தரின் கட்சியில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் எதிர்கட்சிக்கு தாவியுள்ளார்கள். வழமையாக இப்படியான சம்பவங்கள் தேர்தல் காலத்தில் தான் நடப்பது வழமை. ஆனால் தேர்தல் நடக்க முன்னரே இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் முக்கிய பிரமுகர்கள் எதிர்கட்சிக்கு தாவிவிட்டார்கள். இனி மீதமுள்ள 1 மாதத்தில் எத்தனைபேர் எதிர்கட்சிக்கு தாவப்போகிறார்களோ தெரியவில்லை என்ற ஏக்கத்துடன் மகிந்தர் இருந்து வருகிறார். தமது கட்சியில் உள்ள முக்கியமான நபர்களுக்கு பதவிகளை வழங்குவதும், அவர்களுக்கு நல்ல மரியாதை செய்யவும் மகிந்தர் ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை பொதுவேட்ப்பாளர் என்று எதிர்கட்சி இணைந்து ஒருவரை நிறுத்தியுள்ளது, வெளிநாடுகளின் சதித்திட்டமே என்று மகிந்தரின் கட்சியில் எஞ்சியுள்ள சிலர் தெரிவித்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க நேரம், காலம் மற்றும் நல்ல நாள் என்று பார்த்து தான் மகிந்தர் எதனையும் செய்வது வழக்கம். அதுபோல கடந்த 3 தினங்களுக்கு முன்னரே தாம் 3வது தடவையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்து, விருப்பம் தெரிவித்து ஒரு மசோதாவில் கையெழுத்திட்டார் மகிந்தர். அப்போது கூட நேரம் கணித்து தான் அவர் கையெழுத்திட்டார். அதற்கு சாட்சி அருகில் நிற்கும் சட்டமா அதிபர் தான். அவரைப் பாருங்கள் அவர் மகிந்தர் சரியாக எந்தநேரம் கையெழுத்திடவேண்டும் என்று கடிகாரத்தை பார்த்து சொல்கிறார்.
அட மகிந்தரின் அந்த நேரம் தான் இவ்வாறு அவரை ஆட்டிப் படைக்கிறது போல இருக்கே ? நேரத்தை கணித்துச் சொன்ன யோசியர் ராகுகாலத்தை சொல்லிவிட்டார் போல இருக்கு. அது தான் நேரம் சரியாகவேலைசெய்யவில்லை போல ..
http://www.athirvu.com/newsdetail/1501.html

http://www.athirvu.com/newsdetail/1501.htmlபோறபோக்கில் முஸ்லீம் தலைவர்களும் மகிந்தரின் காலை வாருவார்கள் போலத் தெரிகிறது !
[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4585 ]
இலங்கையில் ஜனவரி 8-ம் திகதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரி்ப்பது என்பது தொடர்பில் முக்கியக் கூட்டம் ஒன்றை ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள்குழுக் கூட்டமே இன்று நடந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் மன உணர்வுகளும் எண்ணங்களும் இந்தக் கூட்டத்தில் இன்று வெளிப்படுத்தப்பட்டதாக அதில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிபிசி க்கு தெரிவித்தார்.
இந்த மக்கள் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களை உள்வாங்கி கட்சியின் உயர்பீடம் விரைவில் இறுதிமுடிவை எடுக்கும் என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை, இறுதித் தீர்மானத்தை எடுக்கும்வரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தமுடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். எனினும்,'இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை சம்பந்தமாக அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்திகளை பிரதிநிதிகளூடாக (மக்கள்) இன்றைய கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள்' என்றார் ஹரீஸ் எம்.பி.
'கருத்துக்கூற முடியாது'
இதனிடையே, அரசாங்கத்திலிருந்து எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வெளியேறிய சந்தர்ப்பத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்டவர்களும் வெளியேறவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, எந்த அணியோடு சேரவேண்டும் என்கின்ற தீர்மானத்தைக் கட்சித் தலைமையே எடுக்கமுடியும் என்றும் தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் ஹரீஸ் எம்.பி. பதிலளித்தார்.
எனினும், அந்த செய்தி உண்மையா- இல்லையா என்ற கேள்விக்கு,'அந்த செய்தி சம்பந்தமாக நான் இப்போதைக்கு கருத்துக் கூறமுடியாது' என்று அவர் கூறிவிட்டார்.
http://www.athirvu.com/newsdetail/1499.html
Geen opmerkingen:
Een reactie posten