தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

அரசாங்கத்திற்குள் இருந்த சதித்திட்டமே பண்டாரநாயக்கவின் உயிரை பறித்தது!– மைத்திரிபால சிறிசேன



யாழில் 100 குடும்பங்களுக்கு பசுக்களை வழங்கிய ஓமல்பே சோபித தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 07:07.14 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய, நாளாந்தம் போதிய வாழ்வாதாரத்தை பெற முடியாத 100 குடும்பங்களுக்கு 100 பசு மாடுகள் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஸ்ரீ போதிராஜா நிதியத்தின் தலைவருமான ஓமல்பே சோபித தேரர் வழங்கியுள்ளார்.
இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த நிலையில், மீட்கப்பட்ட 100 பசுமாடுகள் இவ்வாறு 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று யாழ் பொது நூலகத்திற்கு எதிரில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணத்திற்கான இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வாழும் வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் யாழில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவை முன்னேற்றுவது இதன் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo7.html
அரசாங்கத்திற்குள் இருந்த சதித்திட்டமே பண்டாரநாயக்கவின் உயிரை பறித்தது!– மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 07:28.23 AM GMT ]
ஒவ்வொரு நபர்களின் நட்சத்திர மகுடங்களுக்காக எவருக்கும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க முடியாது எனவும் தேர்தலை சந்திக்கும் போது சகோதரத்துவமும் கூட்டு இணைப்பு இருக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்தி்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனநறுவையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்து வந்த சதித்திட்டம் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரான பண்டாரநாயக்க தனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்தது.
பண்டாரநாயக்கவை கொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. அவரை ஐக்கிய தேசியக் கட்சியினர் கொலை செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள வலதுசாரி கொள்கை கொண்ட சக்திகளே பண்டாரநாயக்கவை கொலை செய்தன.
தேர்தல் நடத்தப்படும் போது எவருக்கும் தனித்து தேர்தலை சந்திக்க முடியாது. தேர்தல் நடத்தும் போது ஒற்றுமை இருக்க வேண்டும். சகோதரத்துவம் இருக்க வேண்டும். ஒரு பிணைப்பு இருக்க வேண்டும்.
இதனை விடுத்து ஒவ்வொருவர் தனக்கு புள்ளிகளை போட்டுக்கொள்ளவும் நட்சத்திர மகுடங்களுக்காகவும் தேர்தலை நடத்த முடியாது.
ஒற்றுமை இருக்கும் போதே தேர்தல்களில் வெற்றிகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXepz.html

Geen opmerkingen:

Een reactie posten