[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 02:05.25 AM GMT ]
ராஜகிரிய ஹேவாவித்தாரண பாடசாலையின் அதிபர் நாகசிங்க சித்ரபால கடந்த ஏழு தினங்களாக காணாமல் போயிருந்தார்.
காற்சட்டை அணிந்து சென்ற பாடசாலை அதிபர் வீடு திரும்பிய போது சாரம் அணிந்திருந்தார்.
காணாமல் போன நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அதிபர் தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பியவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அதிபர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பாடசாலையின் கணனி ஆய்வுகூடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருந்த நேரத்திற்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக அதிபர் காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfq2.html
ஆளும் கட்சி சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம்! சுற்றாடல் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 01:29.29 AM GMT ]
தேசிய வீதிகள் சட்டம், உள்ளுராட்சி மன்றச் சட்டம் ஆகியனவற்றுக்கு புறம்பான முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளன.
நாட்டின் சட்டங்கள் மலினப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றாடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளன.
உள்ளுராட்சி மன்றம், மாநகரசபை, நகரசபைகளில் பதாகைகள், தேர்தல் பிரச்சார அலங்காரங்கள் செய்ய வேண்டுமாயின் குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக மின் கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் மற்றும் பெருந்தெருக்கள் வீதிகளில் பதாகைகள் மற்றும் தேர்தல் பிரச்சார அலங்காரங்கள் காட்சிப்படுத்த சில நியம விதிமுறைகள் காணப்படுகின்றன.
எனினும், ஜனாதிபதி தேர்தலுக்காக ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இந்த நியமங்களுக்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகளை அகற்றும் அதிகாரம் பொலிஸாருக்கும், உள்ளுராட்சி மன்ற நிர்வாகிகளுக்கும் காணப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
நாடு முழுவதிலும் காணப்படும் 104 இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் டிப்போக்களின் பஸ்களிலும் ஜனாதிபதியின் படத்தை ஒட்ட வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சகல பஸ்களிலும் ஜனாதிபதியின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அரசாங்கம் இவ்வாறு சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfq0.html
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்: ரணில்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 01:08.49 AM GMT ]
குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களை வாக்களிப்பில் பங்கேற்கச் செய்யாமல் தடுத்தே ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது.
தேர்தல் வெற்றியின் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரம் தேவையெனக் கூறி படிப்படியாக அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
போரின் பின்னர் அதிகாரங்கள் குறைக்கப்படும் என குறிப்பிட்டார்.
எனினும், போரின் பின்னர் தமக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார்.
ஊடக சுதந்திரத்தை ஜனாதிபதி முடக்கினார்.
பிரதம நீதியரசரை குற்றப் பிரேரணை மூலம் பணி நீக்கினார்.
எமது கட்சியை சிதைக்க முயற்சித்தார், அது முடியவில்லை, எனினும் ஏனைய கட்சிகளை பிளவடையச் செய்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய எவரும் ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
தோல்வியடையப் போகின்றோம் என்ற அச்சம் காரணமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய ஆதரவளிக்கத் தயார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார்.
அவசர சட்ட மூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பித்து விவாதம் நடத்தி, சட்டத்தை அமுல்படுத்த முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfqz.html
Geen opmerkingen:
Een reactie posten