தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

லண்டனில் அசேலம் அடிக்க களவாக பிரான்சில் இருந்து வர முற்பட்ட 2 பேர் கருகிச் சாவு !

எப்படியாவது லண்டன் சென்று குடியேறிவிடவேண்டும் என்று, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள பலர் நினைப்பது உண்டு. சிலர் 4000 மைல்கள் பயணம் செய்து பிரன்ஸ்சுக்குள் வந்து, அங்கிருந்து லண்டன் செல்லும் ரக் வண்டிகளில் ஏறி ஒளிந்துகொள்வது வழக்கம். இப்படி பலர் லண்டனுக்குள் வந்து குடியேறுவது தற்போது வழக்கமாகிவிட்டது. உயிரை எந்தவகையிலும் பணயம் வைத்து பிரிட்டனுக்குள் வந்துவிடவேண்டும் என்று இவர்கள் முனைவது பெரும் அதிர்ச்சி தரும் விடையம் தான். ஆபிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள், பல ஆயிரக்கணக்கான மைல் தூரத்தை வாகனங்களில் கடந்து, மொறாக்கோ நாட்டுக்கு வந்து, பின்னர் அங்கிருந்து ஸ்பெயில் வந்து , இறுதியாக ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ் வருகிறார்கள். இவர்கள் பின்னர் அங்கே இருந்து கால் நடையாக பல நூறு மைல் தூரம் நடந்து பிரான்ஸ் கடல் எல்லையை அடைகிறார்கள்.
அங்கே பல வாகனங்கள் பிரிட்டன் நோக்கிச் செல்ல தயாராக காத்து நிற்கும். பிரான்ஸில் கலை என்னும் உடம் மற்றும் டங்கன்கேர்க் என்னும் இடங்களில் இருந்து, கப்பல் இந்த வாகனங்களை ஏற்றிக்கொண்டு லண்டன் வருகிறது. இந்த வாகனங்களில் இவர்கள் ஏறி மறைந்துகொள்வது வழக்கம். இதுபோல நேற்று முன் தினம்(19) லண்டன் புறப்படத் தயாராக இருந்த ரக் வாகனம் ஒன்று திடீரென வெடித்து எரிந்துள்ளது. பொலிசார் உடனே சென்று தீயை அணைத்தார்கள். பின்னர் தான் அங்கே கருகிய நிலையில் 2 உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களவாக வாகனத்தில் ஏறிய அந்த இருவரில் ஒருவர் சிகரெட்டை பற்றவைக்க முனைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவர்கள் ஏறி ஒளிந்துகொண்ட வாகனத்தில் எரியும் தன்மை வாய்ந்த வாயு அடங்கிய சிலின்டர்கள் இருப்பதை அவர்கள் சற்றும் உணரவில்லை. குளிர் காரணமாக இவர்களில் ஒருவர் சிகரெட்டை பற்றவைக்க முனைந்தவேளையே ரக் வண்டி வெடித்து எரிந்திருக்கலாம் என்று பொலிசார் நம்புகிறார்கள். ஆபிரிக்கா போன்ற வறிய நாடுகளில் வாழவே முடியாது என்று கருதும் பலர், பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று நன்றாக வாழவேண்டும் என்ற ஆசையோடு தான் வருகிறார்கள். ஆனால் உயிரை இவ்வாறு பணயம் வைத்து வருவதில் என்ன லாபம் இருக்கிறது ? உயிர் போனபின்னர் எப்படி நன்றாக வாழமுடியும் ? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் !
http://www.athirvu.com/newsdetail/1479.html

Geen opmerkingen:

Een reactie posten