[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:22.17 AM GMT ]
இலங்கை சட்டக்கல்லூரி உரிய முறையில் இயங்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
தகுதியற்றவர்கள் சட்டக் கல்லூரியை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
சட்டக்கல்லூரி நிர்வாக நடவடிக்கைகளை கிரமப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறைச்சாலைகள் தொடர்பில் சரியான கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை.
சில கைதிகள் தேவையின்றி நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
பிணை வழங்குதல் தொடர்பில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
பிணை வழங்குதல் தொடர்பில் உரிய கொள்கைகள் இல்லாத காரணத்தினால் சிறைச்சாலைகள் நிறைந்துள்ளன.
பிணை வழங்குதல் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை பின்பற்ற முடியும் என அஜித் பெரேரா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhxy.html
பொலிஸ் மா அதிபருக்கு தெரியாமலேயே அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:33.54 AM GMT ]
இதனால் பொலிஸ் திணைக்களத்தில் பாரியளவு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தின் பின்னர் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் வழங்கும் அதிகாரிம் பொலிஸ் மா அதிபரிடமிருந்து பறிக்கப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபரும்ää சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருமான மஹிந்த பாலசூரியவிடம் வழங்கப்பட்டுள்ளது.
தகுதியான சிறந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான அதிகாரிகள் தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த நேரத்தில் இடமாற்ற உத்தரவு வழங்கப்படுமோ என்ற அச்சத்துடன் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திடீர் இடமாற்றங்கள் காரணமாக இதுவரை காலமும் செய்யப்பட்டு வந்த சில விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhxz.html
வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- சிவசக்தி ஆனந்தன்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:38.57 AM GMT ]
காணி அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெற்கிலிருந்து செல்லும் சிலர் வடக்கில் எங்களது காணிகளை கைப்பற்றிக் கொள்கின்றனர்.
சில உயர் அதிகாரிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டு வடக்கிற்குச் செல்பவர்கள் இவ்வாறு காணிகளை பெற்றுக்கொள்கின்றனர்.
மேலிடத்திலிருந்து வரும் பட்டியலுக்கு அமையவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டியது அவசியமானது என சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx0.html
Geen opmerkingen:
Een reactie posten