கங்காணிமார்கள் தங்களது சுய நலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் நடத்திய சம்பவங்களை எழுதினால் ஒரு வருடத்திற்கு தினசரி எழுதும் ஆதாரங்கள் இன்றுவரை இருக்கின்றது. அது முக்கியமல்ல என கருதி நாம் இரண்டாம் கட்டத்திற்கு நகருவோம்.
இது அடுத்த கட்டமாக மிக சுருக்கமாக கூறுவோமானால், கங்காணிமார்கள் என்பது பெரிய கங்காணி (head kg) என எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது அவர்களின் செயல்பாடுகளில் பணம், பதவி என்பன பிறரிடம் செல்ல கூடாது என்ற சுய நலம் இதற்கு ஆதரவு வெள்ளைக்கார துரைமார்கள். அதுபோலவே தொழிலாளர் பகுதியிலும் மாற்றங்கள் ஆரம்பம், தொழிலாளர் பகுதியிலும் சிறு சிறு மாற்றங்கள் சிறியளவில் ஆரம்பமானது.
அதை இடைத்தரகர்களாக இருந்த பெரிய கங்காணிமார்கள் (head kg) பொறுக்க முடியாது. தோட்ட நிர்வாகங்களின் ஆதரவுடன் கெடுபிடி வேலைகள். அழுத்தங்களை உபயோகித்து, எதிர்த்த அன்றைய இளைஞர்களை அந்த தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் அளவிற்கு செல்வாக்கு கொண்டிருந்தார்கள்.
இந்தநிலையில் சில இளைஞர்கள் இவர்களின் கட்டுப்பாட்டிற்கு அடங்க வேண்டியவர்களாகவும் அடிமைகளாகவும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனினும், இந்த கங்காணிமார்கள் மிகவும் அவதானமாக இருந்த விடயங்கள் இந்த மக்களுக்கு வெளியாரின் தொடர்புகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதே.
அதை இவர்கள் செம்மையாக செய்து (இன்று வரை) வந்ததோடு, இந்த மக்களை நிரந்தர கடன் சுமையிலேயே வைத்திருந்தார்கள் தோட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை இவர்களே தோட்டங்கள் தோறும் கடைகளை அமைத்தது மக்களுக்கு தேவையான பொருட்களை இவர்களின் கடைகளிலேயே வாங்கியாக வேண்டும் என்ற கட்டளையையும் விதித்தார்கள்.
அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கான பணத்தை தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து எடுத்தும் கொண்டனர். (இப்பொழுது தொழிற்சங்க சந்தா போன்றது .
ஆகவே இந்த கங்காணிமார்களின் முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பதும், அவர்களுடைய ஜாதிகாரர்களை பொருளாதார ரீதியில் உயர்வடைய செய்வதுமே. இதற்கு பிறரின் தொடர்புகள் இவர்களுக்கு ஏற்பட்டால் மக்கள் மாறிவிடுவார்கள் என்ற காரணத்திற்காக அன்றே அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
தொழிற்சங்கம்
சிங்கள தலைவர்கள் இடதுசாரி தொழிற்சங்கங்களை சிங்கள மக்களிடையே ஆரம்பித்தார்கள். இந்த நிலையை புரிந்து கொண்ட இந்த (head kg) பரம்பரையினரும் தோட்ட தொழிலாளர்களுக்கு தொழில் சங்கங்களை ஏற்படுத்துவதற்கு, மறைமுகமாக இவர்களின் கல்வி கற்ற பிள்ளைகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வர்த்த சமூகங்களை (இவர்களின் உறவினர்களை) பயன்படுத்தி தொழிற்சங்கங்களை உருவாக்கினார்கள்.
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேரும் வரை சகலமும் கங்காணிமார்கள் என்ற நிலையில் வாழ்ந்தார்கள்.
இந்த கங்காணிமார்களின் கெடுபிடி,வேலைப்பளு, பாலியல் கொடுமைகள், அடிமையான வாழ்க்கையில் இருந்து விடுபட அக்கால இளைஞர்கள் இடதுசாரி தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்களாகி, இவர்களுக்கு எதிரான நடவடிக்கை போராட்டம் என்று ஆரம்பித்தார்கள்.
இதை கண்ட ஏனைய பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மை இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களுக்கு உதவுவது போன்ற கபட நாடகத்தினை அரங்கேற்றி இந்த கங்காணிமார்களின் (கண்கானி என்பது கவனிப்பதை குறிக்கும்) வம்சங்கள் இந்திய தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பது போல தொழிற்சங்கங்களை ஆரம்பித்து விட்டார்கள்.
இதன் முக்கிய நோக்கத்தை அறியாத அன்றைய இளைஞர்கள் இவர்களின் மறு உருவத்திடம் சரணடைந்தார்கள் எனலாம். அதற்கு காரணம் இந்த தொழிற்சங்க தலைமைகளிடம் இந்த அப்பாவி போய் முறையிட்டது நிர்வாகம் தோட்ட வெள்ளைக்கார துறைமார்கள் கொடுக்க நினைப்பதை தடுக்க நினைப்பவனே இந்த கங்காணிமார் என்று அவனை வெட்டு என்றவுடன் அடுத்த நாள் காலை வெட்டிவிடுவான் பிறட்டு களத்தில் (பிறட்டு என்பது காலையில் தோட்ட தொழிலாளர்கள் எந்த எந்த வேலைக்கு யார் யார் செல்ல வேண்டும் என கட்டளை இடும் இடத்தின் பெயர்) இன்றும் அதே நடைமுறையுள்ளது.
உலகம் மாறியது,காலநிலை மாறியது,களநிலை மாறியது. ஆனால் 200 வருட மலையத்தானின் கடமை நிலை, மனநிலை, அடிமை நிலை மாற வில்லை.
இந்த நவீன காலத்திலும் ஏன், நீங்களும் சற்று சிந்தியுங்கள். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டான் இது அன்றும் இன்றும் நிஜம்.
விபரம், அடுத்த தொடரில்...
மகா.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXewy.html
Geen opmerkingen:
Een reactie posten