[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 06:15.15 AM GMT ]
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
லக்கலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணிகளை பகிர்ந்தளித்து வருவது உண்மை. இது குறித்து நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.
தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார். இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து நான் மனவேதனையில் இருக்கின்றேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன், ஜனக்க பண்டார தென்னக்கோன் காணி அமைச்சராக இருந்தாலும் மாத்தளையில் பிரதியமைச்சர் லக்ஸ்மன் பெரேராவே காணிகளை பகிர்ந்தளித்து வருகிறார்.
அமைச்சர் தென்னக்கோனிடம் அமைச்சர் என்ற பெயர் பலகையும் வெற்று கிண்ணமுமே உள்ளது. வேறு நபர்கள் காணிகளை வழங்குகின்றனர் என ஹரிசன் கூறியுள்ளார்.
அத்துடன் அமைச்சரை எதிர்க்கட்சிக்கு வருகிறீர்களா எனவும் அவர் கேட்டார். சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அமைச்சரின் பதிலை தெளிவாக கேட்க முடியவில்லை என நாடாளுமன்ற செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs3.html
முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு- சந்திப்பு தாமதம்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 06:18.09 AM GMT ]
மைதிரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மேர்வின் சில்வா ஆகியோரின் பாதுகாப்பு உஸ்தியோகஸ்தர்களே இவ்வாறு வாபஸ் பெற உள்ளதாக அந்த இனையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி மகிந்தவிற்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் தற்பொழுது அலரி மாளிகையில் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.
அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு – ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக சகல ஊடகவியலாளர்களும் கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு செய்தியாளர் சந்திப்புக்கான தயார்ப்படுத்தல்கள் காணப்படவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் மைத்திரிபால நடத்தும் ஊடக சந்திப்பு மேலும் தாமதமாகும் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை அமைச்சர் மைத்திரிபால இன்று தனது அமைச்சுடன் சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவிருந்ததுடன் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று மதியம் கொழும்பு நகர மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால கலந்து கொள்ளும் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது.
இதற்காக வேறு நபரின் பெயரில் நகர மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தற்போது கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஏராளமாகத் திரண்டுள்ளனர்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வேளை இந்த சந்திப்பு ரத்துச்செய்யப்படவும் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தற்போது அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ள அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சர் மைத்திரிபாலவின் மகள் பொலன்னறுவை பிரதேச வறிய இளைஞன் ஒருவனுடன் காதல் வயப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் இரவோடு இரவாக கடத்தி வரப்பட்டு பஸ்ஸில் மோதி படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
இந்த சம்பவத்தில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக 90களின் இறுதியில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.
மேலும் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும் கொலைக்குற்றச்சாட்டொன்று நிலுவையில் உள்ளது.
இது தொடர்பான கோப்புகள் மற்றும் மைத்திரிபால மகாவலி அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான கோப்புகளும் தற்போது அலரிமாளிகை கலந்துரையாடல் அறை மேசை மீது வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
எனினும் அமைச்சர் மைத்திரிபால மற்றும் ஜனாதிபதி இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் அறைக்குள் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த், டளஸ் அலஹப்பெரும, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhs4.html
Geen opmerkingen:
Een reactie posten