தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

அரசியல் ஸ்திரத்தன்மைக்காக 18வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது: மகிந்த!

ரணில் தான் ஐ.தே.க.வின் வேட்பாளர் என்பது இறுதி முடிவல்ல: கபீர் ஹாசிம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:22.06 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பீ.பீ.சி. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஐ.தே.க. வின் தவிசாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் கட்சியின் வேட்பாளர்களாக துணைத் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைத்துவக்குழுத் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. எனினும் கட்சியின் செயற்குழு இது தொடர்பில் எதுவித முடிவும் எடுக்கவில்லை.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறக்கும். அதன் மூலம் இந்த அரசாங்கத்தின் அதிகார ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறான ஒரு தகவல் பரவியிருப்பது உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டார். எனினும் மிகத்திறமையான அரசியல்வாதியான மங்கள, கட்சியை விட்டு விலகாமல் பாதுகாத்துக் கொள்வது கட்சித் தலைவரின் பொறுப்பு என்றும் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx0.html
வரவு செலவுத் திட்டத்தில் திருத்தம்: 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவு 2,81,229 கோடி
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:27.53 AM GMT ]
நிதியமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டுக்காக சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தில்  2015ம்  ஆண்டுக்கான செலவு தொகையில் திருத்தம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவு ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 229 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தும்.
அந்த செலவு தற்போது 2 லட்சத்து 16 ஆயிரத்து 829 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டி.எம். ஜயரத்ன இந்த திருத்தத்தை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பித்ததுடன் அது வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
ஜனாதிபதி சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான கடன் வாங்கும் வரையறை ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் கடன் பெறும் வரையறை தற்போது ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx1.html

எமது நாடு யுத்தத்தின் பின் பாரியளவில் முன்னேற்றமடைந்துள்ளது:பிரபா கணேசன்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:32.37 AM GMT ]
எமது நாடு யுத்தத்திற்கு பின்னர் பாரியளவில் அபிவிருத்தியைக் கண்டுள்ளது. அதனை ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கமே செய்து வருகின்றது. அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு தகவல் தொழிநுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள பாடசாலைகளில் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்களை திறக்கும் நிகழ்வு இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களாகிய நாங்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தோடு சேர்ந்து போக வேண்டும்.
எங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை. எங்களுக்கு உரிமை மாத்திரம் தான் தேவை என்று ஒரு புரம் நாங்கள் ஓடிக் கொண்டு இருந்தால் ஏனைய சமூகத்திடம் இருந்து அபிவிருத்தியை இழந்து விடுவோம்.
ரயில் பாதையில் இரண்டு தண்டவாளங்கள் ஒரே சமச்சீராக செல்வது போல் உரிமை அரசியலிலும், அபிவிருத்தி அரசியலிலும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.
அப்படி பயணித்தால் தான் எங்களது சிறுபான்மை சமூகத்தை நாங்கள் இந்த நாட்டில் நல்லதொரு சமூகமாக மாற்ற முடியும்.
ஐக்கியமாக வாழ்வது என்பது பெரும்பான்மை சமுகத்திடம் மண்டியிட்டு வாழ்வதல்ல அது நமக்கு  தேவையுமல்ல மாறாக ஐக்கியம் என்பது அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளும், நாங்களும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே தற்போதைய ஜனாதிபதி அவர்கள் சரியான முறையிலே அபிவிருத்திகளை செய்து கொண்டு போகின்றார்.
அவரிடம் இருந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தேசத்திற்கு மகுடம் 2013 வேலைத்திட்டத்தில் தலா ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்குடாத் தொகுதியில் கல்குடா வலய கல்வி அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி அலுவலகம் ஆகிய பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்களில் பிரைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம், காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயம், வம்மி வட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயம் என்பவற்றில் அமைக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை, கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சிஸ்ரீகிருஸ்னராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்ட பணிப்பாளர் ஏ.சுதாகரன், வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார், வாகரை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், காயங்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் சி.காளிதாசன், வம்மிவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் எஸ்.இந்திரன், கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய அதிபர் எல்.ஆனந்தன், வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபேவன்சலங்கார கிமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx2.html
அரசியல் ஸ்திரத்தன்மைக்காக 18வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது: மகிந்த
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:34.57 AM GMT ]
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே 10 வருடகாலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து அதன் பலனை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்க முடிந்தது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் 5 வருடங்கள் பணியாற்றிய பின்னர், அடுத்த 5 வருடத்தின் மூன்று வருடங்கள் செல்லும் போது கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்படும்.
அப்போது நாட்டை கட்டியெழுப்ப இடமில்லாமல் போகும். நாடு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஸ்திரத்தன்மையான அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx3.html

Geen opmerkingen:

Een reactie posten