தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பில் 175 முறைப்பாடுகள்

கொஸ்லாந்தையில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு: இறுதிக் கிரியைகள் இந்து முறைப்படி
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 08:00.38 AM GMT ]
கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டவர்களில் இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 20 பேர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய மாவட்ட அலுவலகம் ஆகிய தரப்புகள் இந்த எண்ணிக்கையை உறுதிசெய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 300 க்கும் அதிகமான குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதுதவிர ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவுவதால் இயல்பு நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மண்சரிவில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் 11 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச மக்களின் உதவியுடன் இன்றும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.
ஆயினும், பிரதேசத்​தைச் சேர்ந்த ஐந்து பேர் மாத்திரமே இன்றைய மீட்பு பணிகளுக்கு உதவிபுரிந்து வருவதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி குறிப்பிட்டார்.
மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதற்கான தொடர்பாடல் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.
மாவட்ட செயலாளர் தலைமையில், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், மண்சரிவு ஆய்வுப் பிரிவு, சிவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள், இந்து சமய சம்பிரதாயங்களின் பிரகாரம் எதிர்வரும் சில தினங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி குறிப்பிடுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu7.html
மூன்றாவது முறையாக மஹிந்த போட்டியிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை: ஐ.தே.க
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 09:06.24 AM GMT ]
மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை  தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்ட கருத்தை ஒன்றை மேற்கோள் காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியாக அனுமதி இல்லை என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற பரிந்துரைகளை அரச நிறுவனங்கள் அமுலாக்கப்படுவதில்லை என்பதையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கிய அரச நிர்வாக அமைச்சர் டபிள்யு. டி.ஜே செனேவிரட்ன, அதனை தாமும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv1.html
முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பில் 175 முறைப்பாடுகள்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 08:38.35 AM GMT ]
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்ட அமர்வில் 175 பேர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டுசுட்டான் மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 19,766 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி கடந்த 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது முறையாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv0.html

Geen opmerkingen:

Een reactie posten