தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

மோடி நினைத்தால் ராஜபக்சவை பதவியிலிருந்து தூக்கி எறிய முடியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்



விக்னேஸ்வரன் விராலிமலை ஆச்சிரமத்தில்: இன்று காலை சென்னை செல்லவுள்ளார்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 06:24.52 AM GMT ]
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா சென்றுள்ள வடக்கின் முதலாவது முதல்வரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அடுத்த பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்கு சென்றார்.
அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், ஆச்சிரமத்தை சுற்றிப்பார்த்த சி.வி.விக்னேஸ்வரன் நிர்வாகிகளிடம் ஆச்சிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதுகுறித்து ஆச்சிரம நிர்வாகிகள் கூறியது:
பிரேமானந்தா ஆச்சிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி பூஜையில் ஆண்டுக்கு ஒருமுறை சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வார். இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் முறையாக ஆச்சிரமத்துக்கு வந்துள்ளார் என தெரிவித்தனர்.
சி.வி.விக்னேஸ்வரன் வருகையையொட்டி, ஆச்சிரம வளாகத்தைச் சுற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் நேற்று இரவு ஆச்சிரமத்தில் தங்கி ஓய்வெடுத்த விக்னேஸ்வரன், இன்று காலை சென்னை செல்லவுள்ளதாக அந்த இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu4.html

நிலம் தாழ்ந்து காணப்படுகி​ன்றது: 201 போ் இடம்பெயா்வு
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 08:32.16 AM GMT ]
அம்பகமுவ, மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அண்மையில் உள்ள காட்மோர் தோட்டம் போக்மோர் பிரிவு பகுதியில்  உள்ள மலையின் நிலம் தாழ்ந்து காணப்படுவதன் காரணமாகவும் சில இடங்களில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக 47 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
47 குடும்பங்களை சேர்ந்த 201 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜதுரை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தார்.
அதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜதுரை தோட்டத்தில் உள்ள லயக் குடியிருப்புகள், மலையின் நிலம் தாழ்ந்து காணப்பட்டமையும் சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளதோடு மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு விஜயம் செய்த கட்டிட ஆய்வு பிரிவினர் பரிசோதனைகள் செய்த பின் மேற்படி இடம் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfvz.html
மோடி நினைத்தால் ராஜபக்சவை பதவியிலிருந்து தூக்கி எறிய முடியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 08:24.43 AM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சவை பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சரிவர செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எப்படி செய்வீர்களோ, ஏது செய்வீர்களா என்று தெரியாது.
ஆனால், பிரதமர் மோடி நினைத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சவை பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும்.
2016ல் நாங்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.
இல்லையென்றால் நாங்கள் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம் என்று இளங்கோவன் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfvy.html

Geen opmerkingen:

Een reactie posten