தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

லண்டன் சட்டன் நகரில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு: ஆனால் கைதான நபர் பிணையில் சென்றார் !

லண்டனி அண்டிய, சட்டன் , குறொய்டன் மற்றும் மிச்சம் ஆகிய பகுதிகளில் 3க்கும் மேற்பட்ட சிறுமிகளை கற்பழித்ததாக கூறப்படுக்ம் நபரைப் பொலிசார் 21ம் திகதி கைதுசெய்து பின்னர் விடுதலை செய்துள்ளார்கள். இச்செய்தியானது இன்றைய தினம்(25) வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் விசனமடைந்துள்ளார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 வயதுப் பெண் ஒருவரையும் செப்டெம்பர் மாதம் 16 வயதுப் பெண் ஒருவரையும் மற்றும் இம்மாதம் 15ம் திகதி ஒரு பெண்ணையும் என 3 பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார் ஒருவர். அவர் டானியல் எல்லியட் என்னும் நபர் என மெற்றோ பொலிடன் பொலிசார் அடையாளம் கண்டுள்ளார்கள். பூங்காவில் இருந்த 15 வயதுச் சிறுமி ஒருவரை இம்மாதம் 15ம் திகதி டானியல் மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளார்.
மேலும் அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் உள்ளார். கைதான டானியல் எல்லியட் என்னும் நபர் இதுபோன்ற வேறு 2 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் அறிந்திருந்தும் அவரை ஏன் பிணையில் செல்ல அனுமதித்தார்கள் எனப் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தமிழர்கள் செறிந்து வாழும் ரூற்றிங் , மிச்சம், சட்டன் மற்றும் குறொய்டன் போன்ற பகுதிகளில் இதுபோன்ற பல அசம்பாவிதங்கள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. எனவே தமிழ் பெற்றோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/1512.html

Geen opmerkingen:

Een reactie posten