தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

மகிந்த -கோட்டபாய - நமால் ராஜபக்ஷவின் சொத்துக்குவிப்பு சாட்சிகயங்கள் எங்கள் கைகளில் !

ஜனாதிபதி பதவியை மைத்திரிகைப்பற்றிய அன்றே, மகிந்தர் கோட்டபாய மற்றும் நமால் ராஜபக்ஷ குறித்த ஆவணங்களை நாம் வெளியே விடுவோம் என்று முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். கட்சி தாவிய முக்கிய நபர்களின் பண ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக மகிந்தர் கூறுகிறார். ஆனால் மகிந்தரும் அவர் உறவினர்களுகும் நாட்டையே ஊழலாடித்துள்ளார்கள். அது கொஞ்சப் பணம் அல்ல என்றும் சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார். இன்று (25) அவர் தனது சகாக்களோடு தாய் தந்தையர் புதைக்கப்பட்ட நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கே வைத்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மகிந்தருக்கு உள்நாட்டில் அவருக்கு எதிராக என்ன நடந்தாலும், உடனே சர்வதேசத்தின் சதி என்று கூறுவதே வழக்கமாகிவிட்டது. இப்படிச் செல்லியே சிங்கள மக்களை அவர் ஏமாற்றி வந்துள்ளார். இனி இவை பலிக்கப்போவது இல்லை. எமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் பாரிய மோசடிகள் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக வாக்குகளை எண்ணும் இயந்திரங்களை இலங்கை சோனியா அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கைக்கு கொடுத்த அந்த இயந்திரங்களில் சில சித்துவிளையாட்டுகளை காட்டியதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்துள்ளது. ஆனால் இம்முறை மோடி அரசு இருப்பதாலும், சர்வதேசம் இந்த தேர்தலை தாம் உண்ணிப்பாக கண்காணிக்க இருப்பதாகவும் ஏற்கனவே கூறிவிட்டது.
இதனால் மோசடிகளை செய்ய கோட்டபாய மற்றும் கருணா கோஷ்டி வேறு என்ன வழி இருக்கிறது என்று ஆராய்ந்து வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தனை சந்திரிக்கா அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து தனது முயற்சிக்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளார். மைத்திரி ஜனாதிபதியாக வந்தால் தமிழர்கள் விடையத்தில் நிச்சயம் அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்திரி மகிந்தரின் கட்சியை விட்டு வெளியேறியபோதும், அக் கட்சியில் உள்ள எவரும் மைத்திரியை இதுவரை குறைசொல்லவில்லை. பலராலும் அவர் ஒரு நேர்மையானவர் என்று கூறப்படுகிறது. பொதுவாக 2005ம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் இருந்தவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டபோது, மைத்திரியின் பெயர் தான் முன்மொழியப்பட்டதாம். ஆனால் அவர் பெருந்தன்மையாக மகிந்தரின் பெயரை முன்மொழிந்துள்ளார்.
ஆனால் அன்று முதல் இன்றுவரை மைத்திரியை மகிந்தர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. சந்திரிக்காவை காலில்போட்டு மிதித்தது போலவே மைத்திரியையும் தனது காலின் கீழ் வைத்திருக்கவே அவர் ஆசைப்பட்டுள்ளார். இதுவே தற்போழுது மகிந்தருக்கு வினையாக மாறியுள்ளது. தற்போழுது உள்ள நிலையில், இலங்கையில் உள்ள பல சிங்களவர்கள் மகிந்தரின் குடும்ப ஆட்சி போதும் என்று நினைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் தபால் மூலமான வாக்கெடுப்புகள் நடைபெற்று அதன் விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. அதில் யார் வெல்வார்கள் என்ற விடையம் சற்று தெரிய ஆரம்பிக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/1513.html

Geen opmerkingen:

Een reactie posten