அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் சக் ஹாகெல், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குள் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது – ஈராக்கிலும், சிரியாவிலும் ISIS இயக்கத்துக்கு எதிராக நடைபெறும் அமெரிக்க ஆபரேஷன் சொதப்பியதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின், பாதுகாப்பு அமைச்சகம் பென்டகனின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேறும் அல்லது, வெளியேற்றப்படும் 3-வது டாப் புள்ளி இவர். இந்த பதவி நீக்கம் சக் ஹாகெலுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும், காரணம் சில வாரங்களுக்கு முன்புதான் அவர், “ஒபாமா ஆட்சி செய்யவுள்ள இறுதி நாள்வரை இந்த பதவியில் (அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர்) தொடர்வதையே விரும்புகிறேன்” என கூறியிருந்தார்.
அவர் விரும்பினாலும், அவருடைய விதி விரும்பவில்லை – ISIS இயக்கம் உருவில் வந்து சதி செய்துவிட்டது, விதி! சக் ஹாகெல், பணியில் இருந்து விலகுகிறார் என்பதை ஜனாதிபதி ஒபாமா உறுதி செய்துள்ளார். இந்த அறிவிப்பை மேற்கொள்வதற்காக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ‘இறுக்கம் நிறைந்த’ கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி ஒபாமா, சக் ஹாகெல், பணியில் இருந்தபோது ஆற்றிய சேவைகள் பற்றி பாராட்டி பேசினார். ஆனால், தற்போது சிரியாவிலும், ஈராக்கிலும் ISIS இயக்கத்துக்கு எதிராக நடக்கும் அமெரிக்க ஆபரேஷனில், பாதுகாப்புத்துறை செயலாளர் என்ற முறையில் சக் ஹாகெலின் பங்களிப்பு பற்றி வாய் திறக்கவில்லை.
எப்படி திறக்க முடியும்? சக் ஹாகெல் பணி நீக்கம் செய்யப்படுவதன் காரணமே, அங்கே சொதப்பியதுதானே! புதிய பாதுகாப்புத்துறை செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும்வரை, சக் ஹாகலே தொடர்ந்தும் பாதுகாப்புத்துறை செயலாளரின் கடமைகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது – பெரும்பாலும் முடிவு எடுக்க முடியாத கௌரவ பதவியாகவே அது இருக்கும் என ஊகிக்கலாம்!
http://www.athirvu.com/newsdetail/1515.html
Geen opmerkingen:
Een reactie posten