தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை: மத்திய அரசு



கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 08:35.37 AM GMT ]
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ம் திகதி இரவு 8.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மாவத்த வீதியில் நின்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் கைவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், களனியில் நிறுத்தப்பட்டிருந்த இந்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சம்பவ தினத்தன்று முச்சக்கர வண்டிக் சாரதியைத் வெளியே இழுத்து தள்ளிவிட்டே, அதில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் கிராண்ட்பாஸ் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw4.html
கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை: மத்திய அரசு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 08:18.00 AM GMT ]
கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சதீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று மத்திய அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், கச்சதீவில் வலைகளை உலர்த்த, மீனவர்கள் ஓய்வெடுக்க உரிமை உள்ளது என்றும், அதே நேரத்தில் கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
1974-1976ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி பாரம்பரிய உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நியாயப்படுத்தக் கூடாது என்றும் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw3.html

Geen opmerkingen:

Een reactie posten