தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தென்னாபிரிக்கா, இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது!

ஜனாதிபதியின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:25.53 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஸ்கொட்லாந்து பிரதமரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்குமாற இலங்கை ஜனாதிபதிக்கு ஸ்கொட்லாந்து விடுத்த அழைப்பினை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டின் பாரிய மனித கொலைகளை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதியை வியைளாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என ஸ்கொட்லாந்து பிரதமர் அலெக்ஸ் ஸ்லமான்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இலங்கை ஜனாதிபதிக்கான அழைப்பினை ரத்து செய்யுமாற கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx4.html
இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தென்னாபிரிக்கா, இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:39.13 AM GMT ]
இலங்கை தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றை தென்னாபிரிக்கா, இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோசா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இலங்கை தேசியப் பிரச்சினை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்து கொள்ள தென்னாபிரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு என்பதாலும், இலங்கை - இந்திய உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு உள்விவகாரங்களில் இந்தியா தொடர்புபட்டிருப்பதனாலும் இவ்வாறு இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்ள தென்னாபிரிக்கா தீர்மானித்துள்ளது.
தென்னாபிரிக்கா இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என சில கடும்போக்குடைய கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx6.html

Geen opmerkingen:

Een reactie posten