தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கு! திரும்பபெறும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

யாழ். அரச ஊழியர்களுக்கு வீட்டுத் திட்டக்கடன் என அல்வா கொடுத்த அரச ஈட்டு முதலீட்டு வங்கி
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 10:33.39 AM GMT ]
குறைந்த வட்டி வீட்டுத்திட்டக் கடன் என அரச ஈட்டு முதலீட்டு வங்கி யாழ்ப்பாணத்தில் பெருமளவான அரசாங்க ஊழியர்களிடம் வைப்புக்களைப் பெற்று அவர்களுக்கு கடனை வழங்காமல் அல்வா கெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசாங்க வங்கி வைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல், கடன்வழங்கல் ஆகிய சாதாரண வங்கி நடவடிக்கைகளை மாத்திரம் கொண்டது.
இதன் யாழ்.கிளையினர் அரச உத்தியோகத்தர்களுக்கான 2 லட்சம் வீட்டுத் திட்டத்திற்கான கடன் என ஏமாற்றி ஒவ்வொரு அலுவலகங்கள் ரீதியாக பிரசாரம் செய்து பெருமளவான வைப்புக்களைப் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள் உட்பட மூவாயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வைப்புகளை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொருவரும் கட்டாயம் ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை வைப்பாக செலுத்த வேண்டும்.
பின்னர் கிராம சேவகர், பிரதேச செயலாளர் ஆகியோர் அரச ஊழியர் பாதிக்கப்பட்டவர் என  உறுதிப் படுத்த வேண்டும்.
இவ்வாறு மிகுந்த சிரமங்களுடன் விண்ணப்பித்த அனைவரும் பின்னர் ஏமாற்றம் அடைந்தனரே தவிர அவர்களில் எவருக்கும் வங்கிக் கடன் வழங்கப்படவில்லை.
கடைசியான அனைத்து அரச அதிகாரிகளிடம் வங்கியானது ஏமாற்றி வைப்புக்களைப் பெற்றுள்ளதை அறிந்த அதிகாரிகள் என்ன செய்வதென்று அறியாமல் திகைப்பில் உறைந்துள்ளனர்.

பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கு! திரும்பபெறும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 11:34.17 AM GMT ]
பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை திரும்ப பெறுவதாக சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனுதார் மற்றும் ஆலோசனை வழங்கும் சட்டத்தரணி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பி வைக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, அந்த மனுவை தாக்கல் செய்த மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை வெளியிடப்பட்டது

Geen opmerkingen:

Een reactie posten