தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

ஓவர் நைட்டில் ஆயிரக்கணக்கான LIKE களை அள்ளிய மைதிரிபால பேஸ்புக்…

நேற்றைய தினம் பொது வேட்பாளர் அறிவிப்பு வெளியானது முதல் மைதிரிபால சிரிசேன அவர்களின் உத்தியோகபூர்வ‌ பேஸ்புக் பக்கத்தை சுமார் 24000 பேர் ஒரே இரவில் லைக் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பொதுபேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புவரும் வரை 13000 பேஸ்புக் பாவனையாளர்கள் அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை லைக் செய்திருந்தனர்.

பொது வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி இருபத்தி நான்கு மணிநேரம் இன்னும் பூர்தியாகாத நிலையில் 36900 பேஸ்புக் லைக்குகளாக அதிகரித்துள்ளது. இது 190%அதிகரிப்பாகும். ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பேஸ்புக் பக்கம் சுமார் 420000 பேஸ்புக் லைக்குகளை பெற்றுள்ள அதேவேளை மைத்ரிபால சிரிசேன அவர்கள் மிக குறுகிய காலத்துக்குள் 100 000 லைக்குகளை பெறுவார் என அப்பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அண்மைக்கால‌ங்களில் இந்தியாவில் அதிரடி அரசியல் பிரவேசம் ஒன்றை மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அவர்களின் பேஸ்புக பக்கம் குறுகிய காலத்துக்குள் திடீரென பிரபல‌மானது. குறுகிய காலத்துக்குள் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் அவரின் பேஸ்புக்பக்கத்தை லைக் செய்திருந்தனர். இந்தியாவின் சனத்தொகையையும் அங்குள்ள இணைய பாவணையாளர்களை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது மைத்ரிபால சிரிசேனவின் பேஸ்புக்பக்கத்தின் லைக் அதிகரிப்பு அனைவரையும் அவரை திரும்பிப்பார்க்க செய்துள்ளது.
Maithripala
http://www.jvpnews.com/srilanka/87639.html

Geen opmerkingen:

Een reactie posten