தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

பொது வேட்பாளராக மைத்திரிபால மாறியமைக்கான காரணம் என்ன? சகோதரர் விளக்கம்!

நண்பர்களே எதிரிகளான நிலையில் மகிந்த
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 02:24.19 PM GMT ]
தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரே தனக்கு எதிரான வேட்பாளராக வருவார் என்பதைக் நினைத்துப் பார்த்திராத மகிந்தவிற்கு இது ஒரு புதிய யுகம்.
நண்பர்களே எதிரிகளானதொரு நிலையை மகிந்த தற்போது தற்போது எட்டியுள்ளார்.
இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மகிந்தவிற்கெதிரான கூட்டணியொன்றை ஏற்படுத்துமளவிற்கு எதிர்க்கட்சிகளின் முனைப்பு வெற்றியடைந்திருந்தாலும் இந்தக் கூட்டணியின் தன்மை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
இந்த கூட்டணி நிதானமாக முடிவெடுத்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு ஏற்பட்ட ஒன்றல்ல. எனவே இதன் ஸ்திரத்தன்மை பற்றி கருத்து கூறுவது கடினம்.
பாப்பரசரின் வருகை மற்றும் முஸ்லிம், மலையகக் கட்சிகளின் மகிந்தவிற்கான ஆதரவில் மாற்றம் ஏற்பட்டால் அல்லது பௌத்தத்தின் வாக்கு வங்கியில் மகிந்தவின் செல்வாக்கில் பிளவு ஏற்பட்டால் மாத்திரம் மகிந்தவின் வெற்றி வாய்ப்புப் பறிபோகலாம்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியை ஆதரிக்கக் கூறுவதில் பெரிய தர்மசங்கடத்தை ஐ.தே.க எதிர்நோக்கியுள்ளது.
இந்தக் கணிப்புக்களின் அடிப்படையில் மகிந்தவே ஒரு சிறிய பெரும்பான்மையோடு இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியமுண்டு என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfu4.html

பொது வேட்பாளராக மைத்திரிபால மாறியமைக்கான காரணம் என்ன? சகோதரர் விளக்கம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 03:47.00 PM GMT ]
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதற்கான காரணத்தினை அவரது  சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய டட்லி, 
பிரதமர் பதவியை எனது சகோதரருக்கு வழங்காமையினாலேயே அவர் விலகிச் சென்றதாக சிலர் கூறுகின்றனர்.
அது பொய்யான  தகவல். அவர் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்திருந்தால், அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அந்த கட்சியில் உள்ள புதுமையான அரசியல் முறைமை காரணமாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் அந்த நிலையையே எதிர்நோக்குகின்றனர்.
இதன் காரணமாகவே எமது உடலில் இரத்தம் உள்ளவரை இந்தவகையிலான செயல்பாடுகளுக்கு இடம் அளிக்க முடியாது என்ற கொள்கையுடனேயே, மைத்திரிபால சிஙிசேன தனது பாதையினை மாற்றிக் கொண்டார் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfvy.html

Geen opmerkingen:

Een reactie posten