தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த முடியாது என்கிறார் மகிந்த!

மாதுளுவாவே சோபித தேரர் திடீர் சுகவீனம்: வைத்தியசாலையில் அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:05.34 PM GMT ]
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கோட்டே நாக விகாரை விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை உறுதியாக கடைப்பிடித்து வருபவர் இவர். இந்நிலையில் சுகவீனம் காரணமாக இன்று காலை அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நெஞ்சுவலி அதிகரித்த நிலையில் மாலபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சோபித தேரருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக ரீதியான கோரிக்கையை முன்வைத்து வரும் சோபித தேரர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரை அவர் நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.
இதன் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மாதுளுவாவே சோபித தேரரை சாடியதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை நேற்று கோத்தபாய ராஜபக்ஷ, சோபித தேரரை அவரது விகாரையில் நேற்று சந்தித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls7.html

பாரிய கல் ஒன்றினுள் சிக்கிய நபர்! ஆறு மணிநேர போராட்டத்தின் பின் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:19.12 PM GMT ]
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டப் பகுதியில் பாரிய கல் ஒன்று விழுந்ததில் நபரொருவரின் கால்கள் சிக்கிக் கொண்டுள்ளன.
புதிய வீடு ஒன்றிற்கான தளம் வெட்டும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முயற்சித்த போதும், அவரை மீட்க முடியாத காரணத்தினால் பெக்கோ இயந்திரத்தின் உதவியை பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த நபருக்கு பாதிப்பு இல்லையெனவும் அவரின் கால்கள் மட்டும் இறுகி கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டப்பகுதியில் புதிய வீடு ஒன்றிற்கான தளம் வெட்டும்போது மேலிருந்த பாரிய கல்லொன்று வீழ்ந்ததில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல் தளம் வெடிக்கொண்டிருந்த நபரின் மீது வீழ்ந்ததால் அவரின் கால்கள் அதனுள் இறுகிக் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஸ்.விஜயகுமார என்ற 4 பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுப்பட்டபோதும் அவரை மீட்க முடியாத காரணத்தினால், பெக்கோ இயந்திரத்திரத்தை பயன்படுத்தி குறித்த நபரை மீட்டுள்ளனர்.
சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு பின் இவரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட நபர் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlty.html
அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த முடியாது என்கிறார் மகிந்த
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:35.07 PM GMT ]
தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கும் தருவாயில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலகொதர பிரதேசத்தில் வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை இன்று முற்பகல் ஆரம்பித்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்குமாறு தற்போது பலர் மேடைகளில் கோஷம் போட்டு வருகின்றனர்.
இதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தேன்.
இப்படியான நிலையில் தேர்தல் ஒன்று நெருங்கும் தருவாயில் அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியாது.
நாடு முழுவதும் பெருந் தெருக்கள் கட்டமைப்பின் ஏற்பட்டுள்ள விரைவான அபிவிருத்தியுடன் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை சகலரது வாழ்க்கை மட்டமும் உயர்ந்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியாது எனக் கூறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது தனது பதவிக்காலத்தின் முதல் 5 வருடங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இவ்வாறு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அதனை நிறைவேற்றாது, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்ட பின்னர், 18வது திருத்தச் சட்டம் ஒன்றை அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்பித்து ஒரு இரண்டு முறை வகிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வகிக்கும் வகையில் மாற்றங்களை செய்தார்.
அது மாத்திரமல்லது 17 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களையும் இரத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கின்றது.
இந்த இரண்டு வருடகாலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழித்து விட்டு, தேர்தலை நடத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYltz.html

Geen opmerkingen:

Een reactie posten