தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

மீரியபெத்த மக்களுக்கு வசதிகள் கொண்ட தனி வீடு அமைக்கும் பணிகள் ஆரம்பம்

இந்திய பாதுகாப்பு படையினர் இலங்கையில்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 04:47.47 AM GMT ]
இந்திய இராணுவ யுத்த கல்லூரியை சேர்ந்த 20 பேர் அடங்கிய இராணுவ குழு தற்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது.
இந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள பிரிகேடியர் சிந்து இந்த கல்லூரியின் இயக்குனர் ஆவார். இவருடன் உயர் அதிகாரிகள் நால்வரும் இணைந்துள்ளனர்.
இந்த விஜயம் ஓர் சினேக பூர்வமானதொன்று என இலங்கை இராணுவ கட்டளை தளபதி தயா ரடநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, இந்தியா இலங்கை இராணுவ வீரர்களில் 80 சதவீதத்தினருக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் மேலும் 1000 பேருக்கு பயிற்சியளிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் அதிக சந்தர்ப்பத்தை இந்தியா வழங்கும் என்றும் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த சிந்து இரு நாட்டு இராணுவ உறவு மிகவும் பலமாக இருப்பதாகவும் இலங்கையின் இராணுவ யுக்திகளை இந்தியா பயன்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் மேலும் நல்லுறவை பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp1.html

வறிய மாணவர்களுக்கு அல்கிம்மா அமைப்பு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 05:27.29 AM GMT ]
கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும், வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.
எஸ்.ஐ.எம்.சாதாத் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இந்நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹவி) கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அந்நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எல்.ஜாபீர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபரும், இந்நிறுவனத்தின் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.நெய்னா முஹம்மட், ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரியும், ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஏ.காதர், மற்றும் இந்நிறுவனத்தின் செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், மற்றும் அயல் கிராமங்களில் இருந்து கால் நடையாக பாடசாலை வரும் மாணவ மாணவிகள் இனங்காணப்பட்டு முதற்கட்டமாக பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஏழு மாணவர்களுக்கும், மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்குமாக பன்னிரண்டு மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மூன்று குடும்ப பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp2.html
பொன்சேகாவின் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியுடன் இணைவு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 05:47.10 AM GMT ]
சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளுந்தரப்புடன் இணையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், அக்கட்சியைச் சேர்ந்த தென், வடமேல், மேல் மாகாண சபையின் உறுப்பினர்கள் மூவரும், கட்சியின் பிக்கு சம்மேளன செயலாளரான தேரர் ஒருவரும் ஆளும் ஐக்கிய முன்னணியுடன் இணையவுள்ளதாகத் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp3.html
மீரியபெத்த மக்களுக்கு வசதிகள் கொண்ட தனி வீடு அமைக்கும் பணிகள் ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 05:51.43 AM GMT ]
கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லயன் அறைகளுக்கு பதிலாக, வசதிகள் கொண்ட தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கௌறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீரியபெத்த தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடம் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் மண்சரிவு அபாயம் அற்ற பகுதி என பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான இடம் எனவும் மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பிடிகந்த தோடத்தின் லெவர்ன் என்ற இடத்தில், அதாவது அவர்கள் இதற்கு முன்னர் வாழ்ந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவிலேயே இவர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் மண்சரிவு அபாயம் நீக்கப்பட்ட பிரதேசமாகும்.
இதேவேளை மீரியபெத்த மண்சரிவால் பாதிக்கப்பட்டடோருக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக இந்திய அரசாங்கத்தினால் 05 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியுதவியின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் நேற்று பெற்றுக் கொடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் நடராஜா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp4.html

Geen opmerkingen:

Een reactie posten