தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பேரறிவாளனின் தாய் பேட்டி!

முறிகண்டியில் விபத்து: பெண் பலி மற்றவர் வைத்தியசாலையில்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:01.21 AM GMT ]
முறிகண்டியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டி ஏ9 வீதியில், இன்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெண்கள் வீதியை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
விபத்துடன் தொடர்படைய டிப்பர் வாகனத்தின் சாரதி தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp5.html
அண்ணன் தங்கையாக அஸ்வரும் விஜயகலாவும் பாராளுமன்றில்! திஸ்ஸ கரலியத்த கிண்டல்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:04.12 AM GMT ]
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதில் ஆளும் கட்சியின் அஸ்வர் எம்.பி.யும் ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யும் அண்ணன், தங்கையாக செயற்பட்டு வருகின்றனர் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற 2015 ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உரையாற்றிக் கொண்டிருக்கும் போது விஜயகலா எம்.பி. அமைச்சரைப் பார்த்து ஏதோ கூறி கேள்வியையும் எழுப்பிக் கொண்டிருந்தார்.
இதன்போது, உரையாற்றுவதற்கு இடமளிக்குமாறும் அமைதியாக இருக்குமாறும் அமைச்சர் கரலியத்த கேட்டுக் கொண்டார்.
எனினும் விஜயகலா எம்.பி. அமைச்சரின் கோரிக்கைக்கு செவிமடுக்காதவராய் தொடர்ந்தும் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
இதன்போது, விஜயகலா எம்.பி.யை பார்த்து நீங்கள் அஸ்வரைப் போன்று செயற்படுகிறீர்கள். குறுக்கீடுகளில் அஸ்வர் அண்ணனாகவும் நீங்கள் தங்கையாகவுமல்லவா செயற்பட்டு வருகிறீர்கள் என்றார்.
இதனைக் கேட்ட அஸ்வர் எம்.பி. மேசையில் தட்டி வரவேற்ற வேளை, விஜயகலா எம்.பி. அமைதியாக அமர்ந்து விட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp6.html
ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பேரறிவாளனின் தாய் பேட்டி
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:17.31 AM GMT ]
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக  ஐந்து  மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.
இலங்கையில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மண்டபம் யூனியன் மீனவர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பூரணி தலைமையில் தங்கச்சிமடம் சர்ச் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வலசை தெரு ஆட்டோ நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய மகளிர் மீனவர் கூட்டமைப்பு தலைவர் இருதயமேரி, ராஜேஷ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் ஞானசீலன், பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக், மீனவ சங்க தலைவர் சேசு, எமரிட், போஸ், சகாயம் உள்பட 100–க்கும் மேற்பட்ட மீனவர்களும், மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதில் 5 மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
உலகம் முழுவதுமே தமிழர்கள் ஆங்காங்கே நசுக்கப்பட்டு வருகின்றனர். அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
எனது மகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து எதிர்த்து போராடி வருகிறோம்.
அப்பாவி தமிழர்கள் தான் இதுபோன்ற தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp7.html

Geen opmerkingen:

Een reactie posten