தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

ராஜபக்சவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம்: தமிழிசை!

20 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 03:03.02 PM GMT ]
சிலாபம் பகுதியில் வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்படைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தை சேரந்த 40 வயதுடைய நபபேரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex1.html
ராஜபக்சவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம்: தமிழிசை
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 02:27.37 PM GMT ]
இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக இரண்டின் அணுகுமுறையும் ஒன்றே என்பது தவறு. பாஜக இராஜ்ஜிய ரீதியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ராஜபக்சவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை கூறினார்.
பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் திருமலைசாமி இல்லத் திருமண விழாவிற்கு சென்ற தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை அளித்த பேட்டி ஒன்றில், சகோதரர் இளங்கோவன் கூறுகிறார், மோடி அரசு ராஜபக்சவை ஆட்சியில் இருந்து தூக்க வேண்டுமாம். இது எப்படி முடியும்.
கடந்த ஆட்சிகாலத்தில் இதை அவர்கள் செய்திருக்கலாம் அல்லவா?
அதேபோல காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரள மாநில அரசிடம் சென்று பாம்பாறு பிரச்சினையில் தமிழகத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கும், குடிநீர் தட்டுப்பாடு வரும் என கூறி தடுத்து நிறுத்தலாம் அல்லவா?
பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் தேசிய கட்சியில் இருந்தால் தேசிய பிரச்சினை பேசுவார்கள். அதுவே மாநில கட்சியாக மாறும்போது மாநிலப் பிரச்னை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் இருக்கும் கட்சியை சார்ந்தே பிரச்சினையும் இருக்கும்.
இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக இரண்டின் அணுகுமுறையும் ஒன்றே என்பது தவறு. பாஜக இராஜ்ஜிய ரீதியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ராஜபக்சவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம் என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXexz.html

Geen opmerkingen:

Een reactie posten