தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

இலங்கையிலிருந்து இந்தியச் சிறைக்கு மீனவர்கள் மாற்றம்!- சு.சாமி ட்வீட்!

உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 62ம் இடம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 03:49.47 PM GMT ]
உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லெகோ என்ற சர்வதேச நிறுவனம் உலகின் சௌபாக்கியமான நாடுகளை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 62ம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
உலகின் மிகவும் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.
கடந்த 2013ம் ஆண்டில் இலங்கை 60 இடத்தை வகித்து வந்த இலங்கை இந்த ஆண்டு சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் 62ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
142 நாடுகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex4.html
போலி ஆவணங்களைத் தயாரித்த இராணுவக் கப்டன் கைது
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 03:43.40 PM GMT ]
போலி ஆவணங்களைத் தயாரித்த இராணுவக் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடன் பெற்றுக்கொள்வதற்காக போலியான சம்பள பட்டியல்களை தயாரித்து வழங்கியதாக இராணுவக் கப்டன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த இராணுவக் கப்டனை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த ஏழு ஆண்டுகளாக சம்பளமில்லா விடுமுறை பெற்றுக்கொண்டு மாதாந்தம் முகாமிற்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரிய தொழிலில் ஈடுபடாத இருவருக்கு நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை இந்த இராணுவக் கப்டன் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக சம்பளப்பட்டியல்களை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex3.html
இலங்கையிலிருந்து இந்தியச் சிறைக்கு மீனவர்கள் மாற்றம்!- சு.சாமி ட்வீட்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 03:36.18 PM GMT ]
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் இந்தியாவிலுள்ள சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று மாலை தனது ட்விட்டர் வலைத்தளம் ஊடாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து மீனவர்களை இந்திய சிறைகளுக்கு மாற்றுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டரில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex2.html

Geen opmerkingen:

Een reactie posten