[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 08:32.55 AM GMT ]
அதில் கூட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான சுமார் 5 லட்சம் ரூபா பணம், செல்போன், தூய்மையான நாளை அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்ததான ஆவணங்கள் சில இருந்துள்ளன.
எவ்வாறாயினும் பயண பொதியை திருடியவர் யார் என்பதை ஜாதிக ஹெ உறுமயவினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
கூட்டத்தில் அழைப்பின்றி கலந்து கொண்ட மற்றுமொரு பிக்குவே இந்த பயண பொதியை திருடியுள்ளார்.
போப்பிட்டி தம்மிஸ்ஸர என்ற இந்த பிக்கு மேலும் இரு பிக்குகளுடன் மேடையில் இருந்தார்.
ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த சிலர் அந்த தேரரை நேரில் சந்தித்து பயண பொதியை உடனடியாக ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் பயண பொதி ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் அதில் செல்போன் மாத்திரமே இருந்துள்ளது. பணம் மற்றும் ஆவணங்கள் அதில் இருக்கவில்லை.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆலோசனைக்கு அமைய ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒருவரின் உதவியோடு குறித்த பிக்கு ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx4.html
உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்: ஏ.எல்.ஏ.எம். அதாவுல்லா
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 08:59.48 AM GMT ]
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சிக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.ஏ.எம். அதாவுல்லா இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சம்பளம் 5000 ரூபாவில் இருந்து 15 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
பிரதேச சபையின் உப தலைவரின் சம்பளம் 6500 ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 10 ஆயிரம் ரூபாவாக இருக்கும் பிரதேச சபையின் தலைவரின் சம்பளம் 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அதேவேளை நகர சபை உறுப்பினர் ஒருவர் சம்பளம் 7000 ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.
நகர சபை பிரதித் தலைவரின் சம்பளம் 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாவாகவும் நகர சபையின் தலைவரின் ஊதியம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 30 ஆயிரம் ரூபாவாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் அதாவுல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx5.html
எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி கூட்டத்துக்கு அரசின் அச்சுறுத்தல்?
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:13.17 AM GMT ]
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கலந்து கொள்ளும் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வைபவம் கோட்டே அருகில் உள்ள பார்க் ஸ்ட்ரீட் வீவ்ஸ் ஹோட்டலில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
இந்நிலையில் குறித்த ஹோட்டலைத் தொடர்பு கொண்டுள்ள அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பான வைபவத்துக்கு ஹோட்டலில் இடமளித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது தமது ஹோட்டலில் எந்தவொரு வைபவத்துக்கும் இடமளிக்க முடியாது என்று குறித்த ஹோட்டல் நிர்வாகத்தினர் எதிர்க்கட்சி கூட்டணி முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இந்தக் கூட்டணியின் ஏற்பாட்டாளர் சோபித தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் கடுமையான நேரடி அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த அதிர்ச்சியில் திடீர் நோய் வாய்ப்பட்டுள்ளார்.
எனினும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் புரிந்துணர்வு கையொப்பமிடும் நிகழ்வுக்கு தான் ஆம்புலன்சில் வரவும் தயாராக இருப்பதாக மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வை எக்காரணம் கொண்டும் பிற்போடக் கூடாது என்பதில் தான் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx6.html
Geen opmerkingen:
Een reactie posten