தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

இரத்தினபுரியில் 5 மற்றும் 10 ரூபா நாணயங்களை பன்மடங்கு விலை கொடுத்து வாங்கும் மர்மநபர்கள்!
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:22.54 AM GMT ]
இரத்தினபுரி பிரதேசத்தில் சிலர் 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயங்களை அதிக பணம் கொடுத்து வாங்குவதாக தெரிய வருகிறது.
இவ்வாறு நாணயம் சேகரிக்கப்படுவது வர்த்தகமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
5 ரூபா நாணயத்தை ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபா கொடுத்து கொள்வனவு செய்வதாகவும் 10 ரூபா நாணயத்தை 2 ஆயிரம் ரூபா கொடுத்து கொள்வனவு செய்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வீடுகளுக்கு செல்லும் சிலர் தலதா மாளிகையின் படம் பொறிக்கப்பட்டுள்ள 10 ரூபா நாணய குற்றியை கேட்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்திபுரியில் மாத்திரமல்லாது வேறு சில பிரதேசங்களில் இவ்வாறு நாணய குற்றிகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
யார் இவற்றை சேகரிக்கின்றனர். எதற்காக சேகரிக்கின்றனர் என்ற தகவல்கள் கண்டறிப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx7.html
ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபை தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:26.22 AM GMT ]
நந்தன குணதிலக்கவை தொடர்ந்தும் ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபை தலைவர் பதவி விலக தீர்மானித்துள்ளார்.
மாத்தளை அம்பான்கஹாகோரளே பிரதேச சபையின் தலைவரான சுனில் விஜேதிலக்கவே இவ்வாறு பதவி விலக தீர்மானித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இவர் மூன்று முறை பிரதேச சபை தலைவராக பதவி வகித்துள்ளதுடன் இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து விலகி அரசியலில் இருந்தும் ஓய்வுபெற போவதாக சுனில் விஜேதிலக்க அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள அரசியல்வாதிகளின் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது. முறைகேடாகவும் இவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.

சிலர் சாராயம், பிரியர் போன்ற மதுபானங்களை தயாரிக்கின்றனர். ஹெரோயின் கடத்தி வருகின்றனர். எத்தனோல் இறக்குமதி செய்கின்றனர். இவை நல்ல வியாபாரங்கள் அல்ல. இதனால், என்னை போன்றவர்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாணந்துறை நகர சபை முதல்வராக பதவி வகித்த நந்தன குணதிலக்க நேற்று பதவி விலகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkoy.html
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:38.24 AM GMT ]
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 17 ஆம் திகதி ஆறு படகுகளுடன் பங்களாதேஷ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷில் இருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், இந்த மீனவர்களை நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஏ.ஜீ.அபேசேகர தெரிவித்தார்.
அந்த நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மீனவர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்காக பங்களாதேஷ் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுகளின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், உரிய சட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் இலங்கை மீனவர்கள் 20 பேரையும் அடுத்த வாரமளவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க முடியும் என்றும் பங்களாதேஷுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkoz.html

Geen opmerkingen:

Een reactie posten