உக்குவெல-வராப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பட்டதாரி மாணவியான நதிஷாவி(வயது 24) ரகசிய கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர், குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நுகபிட்டிய பிரசேத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 24ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளமையை தெரிந்து கொண்ட சந்தேகநபர், நடுநிசி பொழுதில் குறித்த யுவதியின் வீட்டு வளவுக்கு சென்றுள்ளார்.
வீட்டிலுள்ளவர்கள் உறங்கிய பின்னர் யுவதியின் வாயை மூடி, வீட்டு வளவுக்கு பின்னால் இழுத்துசென்றுள்ளார். பின்னர் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1409.html
Geen opmerkingen:
Een reactie posten