தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

இன்ரர் போல் பொலிசாரின் கூட்டம்: இலங்கைப் பொலிசாரும் கலந்துகொண்டுள்ளார்கள் !

லண்டனில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கூட்டம் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ...


லண்டனில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின், ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01.11.14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படங்கள் இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/1351.html

சஜினிடம் அடி வாங்கிய கிறிஸ் நோனீஸ் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் !


பிரித்தானியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தாக்கியதாக கிறிஸ் நேனீஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன் கலந்தாலோசனை செய்ததன் பின்னர், மகிந்தர் கிறிஸ் நோனீஸை தமது ஆலோசகராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், கிறிஸ் நோனீஸிற்கு எதிராக இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோனீஸிற்கு எதிரான பல முறைப்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்னவே முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோனீஸ் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இது இவ்வாறு இருக்க நோனிஸ் இலங்கை செல்வாரா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பெரும் சந்தேகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கி இருக்கிறார். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ உட்பட பலர் அவரை இலங்கை வருமாறு அழைத்து வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1355.html

இன்ரர் போல் பொலிசாரின் கூட்டம்: இலங்கைப் பொலிசாரும் கலந்துகொண்டுள்ளார்கள் !


பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) பொதுச்சபை கூட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(02) கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச பொலிஸாரின் 83ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் மொனோஸ்கோவில் நவம்பர் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை நடைபெறுகின்றது, என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1356.html

Geen opmerkingen:

Een reactie posten