தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

மஹிந்த ‘ஒரு பொய்யன்' : சொல்ஹெய்ம் பலத்த பதிலடி கொடுத்துள்ளார் !

அலரி மாளிகையில் அலறி அழும் மகிந்தர்: ரகசியமாகச் சொன்ன விடையம் என்ன ?

[ Nov 17, 2014 07:37:22 AM | வாசித்தோர் : 16700 ]
கடந்த 2005ம் ஆண்டு முதல் முடிசூடா மன்னனாக சிங்களவர் மத்தியில் இருந்து வரும் மகிந்தர் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டார். இவரைப் பார்க்க தற்போது யார் அலரி மாளிகை சென்றாலும், மகிந்தர் புலம்புவது எல்லாம் ஒரு விடையத்தைப் பற்றிதான். அது என்னவென்றால் "அமெரிக்கா" .... "புலம்பெயர் தமிழர்கள்" .... இவை இரண்டும் என்ன செய்தது என்று தெரியவேண்டுமா ? அதள பாதாளத்தில் இவரை வேறுவிதமாக தள்ளி இருக்கிறது. புலம்பெயர் தமிழர்களும் அமெரிக்கா போன்ற நாடுகளும் மகிந்தரின் போர்குற்றங்கள் தொடர்பாக பேசிவந்தது. ஆனால் அதற்கான தண்டனையை வாங்கிக்கொடுக்க இன்றுவரை ஏதுவான நிலை தோன்றவில்லை. இதனால் மகிந்தர் தனது அதிகாரிகளை, செல்வாக்கு மிக்க கட்சி தலைவர்களை, அரசியல் வாதிகளை எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்த விடையத்தை கவனிக்கச் சொன்னார்.
தன்னிடம் இருந்த கல்விமான்களை, புத்தி ஜீவிகளை எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவே பயன்படுத்தினாரே தவிர, உள்ளூரில் அவர்கள் எவரையும் களமிறக்கவில்லை. அதாவது எவரும் மகிந்தருக்கோ இல்லை அவர் கட்சி சார்பாகவே எந்த ஒரு பெரிய, பரப்புரைகளையும் இதுவரை செய்யவில்லை. கடந்த 2012ம் ஆண்டு, முதன் முதலாக அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அந்த நாள் முதல் மகிந்தரின் பரிவாரங்கள் அனைத்தும், அதனையும் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும் சமாளிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் உள்ளூரில் ஒரு பிரச்சாரத்தையும் அவர்கள் செய்யவில்லை. ஊர் ஊராகச் சென்று மகிந்தரோ இல்லை அரது சகோதரர்களோ எந்த ஒரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்ததை இவர்களும், இவர்களது அரசும் கவனித்து வந்துள்ளது. தமது வளங்கள், அனைத்தையும் திரட்டி, எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்று திட்டம் தீட்டி வந்துள்ளார்கள்.
இதனால் சிங்கள மக்களுக்கு மத்தியில் அவர் செல்வாக்கு வெகுவாக குறைந்துவிட்டதை அவர் அவதானிக்க தவறிவிட்டார். இதுவே ஊவா மாகாணத் தேர்தலிலும் பிரதிபலித்தது என்று கூறலாம். தற்போது நடக்கவுள்ள தேர்தலில் தான் வெற்றிபெறுவேனா மாட்டேனா ? தோற்றுப் போனால் எவ்வளவு பெரிய அவமானம் நேரும் ? என்று எல்லாம் எண்ணி, தன்னை சந்திக்கவரும் கட்சித் தலைவர்களோடும் முக்கியஸ்தர்களோடும் இவர் புலம்பி வருகிறாராம். இதனால் மகிந்தரை பார்த்துப் பேசிவிட்டுச் செல்லும் அனைவரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள். அது என்னவென்றால் மகிந்தர் குழம்பிப்போயுள்ளார் என்பது தான். ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கு நாட்டில் நிலைத்திருக்கவேண்டும் என்றால், அவர் அடிக்கடி தனது தொகுதிக்குச் செல்லவேண்டும். மக்கள் சந்திப்பில் இருக்கவேண்டும். இல்லையென்றால் கூட நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை அமுல்படுத்தி இருக்கவேண்டும் அல்லவா.ஆனால் மகிந்தரோ கடந்த 2012ம் ஆண்டு முதல் தன்னையும், தனது பரிவாரங்களையும் காப்பாற்றவே செயல்திட்டங்களை தீட்டி வந்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் ஈடுபடவில்லை. கட்சி தொடர்பாக எதனையும் செய்யவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. புலிகளை வென்றார் என்று சிங்களவர்கள் மகிந்தரை என்னதான் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும், அது எல்லாம் எத்தனை வருடம் நீடிக்கும் ? காலப்போக்கில்மக்கள் இயல்பாகவே அதனை எல்லாம் மறந்துபோய்விடுவார்கள் அல்லவா ? அது தான் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளது. இனி புலிகளை வைத்து மகிந்தர் போட்ட பாச்சா எல்லாம் பலிக்காது. அது பயனற்றுப்போய்விட்டது. இதனை உணர்ந்த மகிந்தர் தற்போது, ரணில் புலிகளுக்கு உதவினார். நோர்வே புலிகளுக்கு நிதிகொடுத்தது என்று எல்லாம் சொல்லி தூசி தட்டி, மீண்டும் புலிகள் புராணம் பாடலாம் என்று கனவு காண்கிறார். இது பலிக்காது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியினர் சரியான ஒரு ஆளை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் கிட்ட வாய்ப்புகள் உள்ளது. இதுவரை காலமும் நாம் போராடி என்னத்தைக் கண்டோம் என்று சலித்துக்கொள்ளும் தமிழர்களுக்கு இப்போது புரியும், நீங்கள் எதனை சாதித்து இருக்கிறீர்கள் என்று. ஒரு நாட்டின் அதிபர் தனது சொந்த நாட்டில் அரசியலில் ஈடுபடாமல், வெளிநாட்டில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அவர் தனது சொந்த நாட்டில் அரசியல் பலத்தை இழக்க நேரிடும் என்ற சூத்திரம் இப்போது உங்களுக்கு புரியும் என நான் நினைக்கிறேன்.
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்
http://www.athirvu.com/newsdetail/1455.html

மஹிந்த ‘ஒரு பொய்யன்' : சொல்ஹெய்ம் பலத்த பதிலடி கொடுத்துள்ளார் !

[ Nov 17, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 13425 ]
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு அப்பட்டமான பொய்யன் என்றும், தேர்தலுக்காகப் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார் என்றும் இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று, கடுமையாகச் சாடியிருக்கிறார். இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர், இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் நோர்வேயில் விசேட சமாதானத் தூதுவராக விளங்கிய எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இரகசியமாக நிதி வழங்கியிருப்பதாக, சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இதற்குத் தனது டுவீட்டரில் குறிப்பு வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம்: “தேர்தலொன்று அண்மித்துவரும் காலபகுதியில் இலங்கை ஜனாதிபதி அப்படமாகப் பொய் கூறுகிறார். இதற்கான தக்க பதிலை நான் நாளை வெளியிடுவேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே, எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு இந்த நிதியினை வழங்கியதாகக் கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி, விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமானவர்கள் என்றும் அவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று அவர் தன்னிடம் பலமுறை கூறியிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். சபாஷ் சரியான போட்டி ஆரம்பித்து உள்ளது. மகிந்தர் மோதக்கூடாத ஆள் ஒருரோடு மோதியுள்ளார் போல இருக்கும். ஏன் என்றால் பல ரகசியங்களை தன்க்குள் பூட்டிவைத்திருக்கும் மனிதர்களுக்குள் எரிக் சொல்கைமும் ஒருவர் என்பதனை எவரும் மறுக்கமுடியாது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மேலோங்கியிருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் சமாதான அனுசரணை முயற்சிகளில் நோர்வே நேரடியாக ஈடுபடத் தொடங்கியது. அந்த முயற்சியின் பலனாக 2002 ஆம் ஆண்டு மோதலில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கயொன்று எட்டப்பட்டுச் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முடிவில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட இது வழிசெய்தது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சியினைத் தொடர்ந்து, ஏப்பிறல் 2006 ஆம் ஆண்டு இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் சர்வதேச நாடுகள் பலவற்றின் அனுசரணையுடன் 2009 மே மாத நடுப்பகுதிவரை இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் போது சுமர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திட்டமிட்டமுறையில் அரச படைகளினால் கொன்றழிக்கப்பட்டனர்.
இது குறித்த போர்க் குற்ற விசாரணைகளில் ஐ.நா தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த விசாராணைகளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்திருப்பதுடன், விசாரணையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1447.html

Geen opmerkingen:

Een reactie posten