தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

கணக்குத் தெரியாத மாணவனும் சரி எடுக்கலாம்

கணக்கியல் (ACCOUNTS) என்ற பாடத்தில் மிகச் சிறந்த ஆசானாக விளங்கியவர் அழகேசன். கணக்கியல் சார்ந்த பல புத்தகங்களை எழுதிய பெருமை அவரைச் சாரும்.
ஒரு முறை க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகத் துறையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் ஒருவன் கணக்கியலில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தான்.
அந்த மாணவன் வினாத்தாளில் கேட்கப்பட்ட இலாப நட்டக் கணக்கை செய்யமுற்பட்டான்.
இலாப நட்டக் கணக்குக்குரிய அட்டவணையைத் தயாரித்துவிட்டு வினாத்தாளில் கொடுக்கப்பட்ட பரீட்சை மீதியை இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கத்திலும் செலவுப் பக்கத்திலும் அப்படியே முழுமையாகப் பதிவு செய்தான்.
விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர் அந்த மாணவன் விடை அளித்த முறையில் வெறுப்பு அடைந்து சிவப்பு பேனையால் ஒரேவெட்டு வெட்டி விட்டார்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர் அழகேசன் தலைமை மேற்பார்வையாளராகப் பணியாற்றிருந்தார். குறித்த விடைத்தாள் அவரின் கைக்கு வந்த போது, அந்த விடைத்தாளை திருத்தம் செய்த ஆசிரியரை அழைத்தார்.
எதற்காக இந்த விடையை வெட்டினீர்கள் என்று வினாவினார். அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் சேர், இந்த மாணவன் பரீட்சை மீதியை அப்படியே வரவுப் பக்கத்திலும் செலவுப் பக்கத்திலும் எழுதியுள்ளான் என்றார்.
ஆசிரியர் கூறியதைக் கேட்ட அழகேசன் பரவாயில்லை, இந்த மாணவன் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டுள்ளான்.
எனவே பரீட்சை மீதியில் வரவுப் பக்கத்தில் வரவேண்டியதற்குச் சரி போடுங்கள். அதேபோல் செலவுப் பக்கத்தில் வரவேண்டியதற்கும் சரி இடுங்கள் என்றார்.
ஆம், குறித்த மாணவனுக்கு கணக்கியல் அறிவு குறைவாயினும் கணக்குப் பதிவு செய்யும் அடிப்படை அறிவைக் கொண்டுள்ளான்.
எனவே அவன் தனது அடிப்படை அறிவைப் பிரயோகித்ததன் விளைவாகவே இலாப நட்டக் கணக்கில் வரவு, செலவு என்ற இரு நிரலிலும் பரீட்சை மீதியை அப்படியே பதிவாக்கினான்.
ஆக, கணக்குத் தெரியாத மாணவனும் சரி எடுக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இந்த மாணவனுக்கு கணக்குத் தெரியாது என்று நினைத்து பிழைபோடுவது மகா தவறு.
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த ஜாதிக யஹல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அந்த வேண்டுகோள் முஸ்லிம் மக்கள் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்பதாகும்.
சோபித தேரர் விடுத்த கோரிக்கை மிகவும் முக்கியமானது.
முஸ்லிம் மக்கள் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்பதற்கு அப்பால், வட மாகாண த்தில் மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாக மூடிவிடுவதற்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் எனக் கேட்பது பொருத்தமானதாகும்.
வட பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகள் இயங்குவது சைவ மக்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
பசுவைத் தாயாகப் போற்றுகின்ற சைவ மக்கள் வாழும் வட பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது.
எனவே வட புலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை முழுமையாகத் தடை செய்வதற்கு பிற சமயங்களும் உதவ வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் உதவுவது கட்டாயம்.
முஸ்லிம் மக்கள் பன்றியை வெறுப்பவர்கள். அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தில் பன்றி இறைச்சிக் கடையை எந்தச் சமயம் சார்ந்தவர்கள் வைத்திருந்தாலும் அது அநீதியானது.
எனவே இதுபோல சைவ மக்கள் பெருமளவில் வாழ்கின்ற வட புலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை யார் வைத்திருந்தாலும் அது ஏற்புடையதன்று.
ஆகவே வட புலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாகத் தடை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஹெல உறுமயவின் தலைவர் சோபித தேரர் பல பிழைகளை விட்டிருந்தாலும் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும் எனக் கேட்டிருப்பது மிகச் சரியான விடையாகும்.
வலம்புரி

Geen opmerkingen:

Een reactie posten