[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:38.43 AM GMT ]
பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார்.
அதன்காரணமாக மாலக்க சில்வா தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnq1.html
ஜனாதிபதியின் இரகசிய பணியாளர்களாக 139 பேர் நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:43.30 AM GMT ]
ஜனாதிபதி காரியாலயத்தில் தற்பொழுது சேவையாற்றும் 1498 பணியாளர்களுக்கு மேலதிகமாக தற்போழுது 139 புதிய நியமனம் 2015ல் வழங்கப்படவிருப்பதாகவும், இந்த நியமனங்கள் ஊடாக நாடெங்கும் இவர்கள் பல்வேறு திட்டங்களில் இரகசியமாக சேவையாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி காரியாலயத்தில் ஏற்கன’வே 1498 பேர் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் புதிதாக 139 பேர் நியமிக்கப்பட்டு பணியாளர்களின் தொகை 1637 ஆக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பணி மிகவும் இரகசியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இவர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnq2.html
மின்சார சபை அதிகாரியை தாக்கிய பிக்குவுக்கு அச்சுறுத்தலாம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:56.22 AM GMT ]
அத்துடன், தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் விலக்கிகொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஒரு வகையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை பொலிஸ் திணைக்களமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் விஹாராதிபதி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருக்கின்ற ஒரேயொரு பௌத்த விஹாரை மங்களராம விஹாரையாகும்.
இந்த விஹாரையில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக வருகைதந்த இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பிலான காணொளி இணையத்தளங்களில் வெளியானது.
அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnq3.html
Geen opmerkingen:
Een reactie posten