மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி நீதிமன்றத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு தான் எவ்விதமான மன்னிப்பும் வழங்கபோவதிலலை என கெப்பிட்டிகொல்லாவ மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ராஜா சிறிமேவன் மகேந்திர ராஜா தெரிவித்துள்ளார்.
வயது வந்த மாணவிகளுடன் செயற்படும் போது பாடசாலை ஆசிரியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தம்மிடம் கல்வி பயிலும் மாணவி அல்லது மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் ஆசிரியர் சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படியான நபர்களுக்கு பிணை வழங்குவது குறித்தும் நான் பரிசீலித்து பார்க்க போவதில்லை எனவும் நீதிபதி மகேந்திரராஜா கூறியுள்ளார்.
பதவிய மற்றும் கொப்பிட்டிகொல்லாவ பிரதேசங்களில் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து கலந்துரையாடும் போதே நீதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாம் எந்த இலக்கை அடையப்போகின்றோமோ அதனை அ டைவதற்கு அயராத முயற்சி எடுக்கவேண்டும் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன்
நாம் எந்த இலக்கை அடையப்போகின்றோமோ அதனை அடைவதற்கு அயராத முயற்சி எடுக்கவேண்டும் அவ்வாறு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எமது அடுத்த கட்ட வெற்றிக்கு படிக்கல்லாக அமையும் என கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் தெரிவித்தார்.
நேற்று இருதயநாதர் மண்டபத்தில் குழந்தை ஜேசு முன்பள்ளி பாலர் பாடசாலையின் 2014ஆம் ஆண்டிற்கான மாணவர்களினது பெற்றோர் தின விழா முன்பள்ளி அதிபர் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பபாளர் ஏ.எல்.சக்காப் ஆன்மீக இயக்குனர் திரு இருதயநாதர் ஆலயத்தின் பங்குத்தந்தை அன்றனி லியோ மற்றும் பெற்றோர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி,
இந்த உலகத்திலே இரண்டு உலகப்போர் நடைபெற்றிருக்கின்றது அந்தவகையில் முதலாவது உலகப்போரில் கலந்து கொண்ட ரசிய நாட்டு விமானி ஒருவர் யுத்தகளத்தில் முழந்தாலுக்கு கீழ் தன்னுடைய ஒரு பகுதியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது அதனால் இனிமேல் அவர் விமானம் ஓட்டமுடியாத நிலை உருவானது அதனால் அவர் தனது படைத்தளபதியிடம் தான் மீண்டும் விமானம் ஓட்ட வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதினார் அதனை படைத்தளபதி ஏற்க மறுத்தார்.
அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அவரது மனம் ரசிய நாட்டு ஜனாதிபதியிடம் அவரது கோரிக்கையை முன்வைத்தார் அதனை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் தன்னை முழுமையாக பயிற்சியில் ஈடுபடுத்தினார் அதுவும் போர் விமானப்பயிற்சியில் தனது முழு நேரத்தினையும் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டார் பின்னர் இரண்டாம் உலகப்போரிலே ஒரு காலை இழந்த போர் விமானி என்ற சாதனையைப்படைத்து தனது இலக்கினை வெற்றிகொண்ட ஒருவராக திகழ்ந்தார்.
ஒருவருக்கு ஏற்படும் தோல்வியானது அவரது அடுத்த இலக்கினை அடையும் வெற்றியின் படிக்கல் என்பதனை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உணரச்செய்வது ஒவ்வொரு பெற்றோர்களதும் தலையாய கடமையாகும்.
பல பேர்பெற்ற அறிவாளிகள் பல தோல்விகளை கண்டபோதும் தங்களது விடாமுயற்சியின் பயனாக பல சாதனைகளைப்படைத்தார்கள் என்பதனை அனைவரும் நினைவில் வைத்திருத்தல் அவசியமாகும்.
பிள்ளைகளிடத்தே தன்னம்பிக்கையை வளர்தெடுக்க முயற்சிக்கவேண்டும் அவர்களை சுயமாக இயங்கச்செய்தல் வேண்டும் அவ்வாறு வளர்த்தெடுக்கும்போதுதான் அவர்கள் சமூகத்திற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள்.
பெற்றோர்கள் எப்போதும் எமது பிள்ளைகளிடத்தே தோல்வியினை ஏற்றுக்கொள்ள பழக்குதல் வேண்டும் எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்ற எண்ணக்கருவை பிள்ளைகளிடத்தே ஏற்படுத்தக்கூடாது தோல்வி அடைந்தாலும் நேர்மையாக தோற்பது மேலானது என வலியுறுத்தவேண்டும் தோல்விதான் வெற்றியின் படிக்கல் என்பதனையும் ஞாபகத்தில் வைத்திருக்க ச்செய்தல் வேண்டும்.
பிள்ளைகளுக்கு தண்டனைகள் வழங்குவதன் மூலமும், அவர்களுக்கு எந்த நேரத்திலும் பேசுவதன் மூலமும் அவர்களது எதிர்காலத்தினை பாழாக்காதீர்கள் மாறாக அவர்களை எந்த நேரமானாலும் சரி பாராட்டுங்கள் அந்தப்பாராட்டு அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளின் மனோநிலையை அறிந்து செயற்பட பழகிக்கொள்ளுதல் வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் சமூகத்திற்கு ஏற்றவர்களாக அவர்களை உருவாக்கமுடியும் இங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சிறந்ததாக அமைந்திருந்தது இதனை ஒழுங்கமைத்த அனைவருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து சிறார்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq3.html
Geen opmerkingen:
Een reactie posten