தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

இலங்கை கிரிக்கட் நிறுவனம் கொள்ளையர்களின் குகையாக மாற்றமடைந்துள்ளது: அர்ஜூன ரணதுங்க!

ஞானசார தேரர் ஜனாதிபதித் தேர்தலில்: அழுத்தம் கொடுக்கும் அமைப்பு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:56.21 AM GMT ]
நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமையில் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அரசியல் கொள்கையை வலுப்படுத்த அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்த அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக பொதுபல சேனா அமப்பின் அரசியல் சபை அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஞானசார தேரரையும் தேர்தலில் நிறுத்துவது என இதன் போது தீரமானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjqy.html
ரணிலுக்கு 48 மணிநேர கால அவகாசம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 08:09.32 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உரிய வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோட்டே ஸ்ரீ நாக விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் சம்பந்தான பொது உடன்படிக்கை கையெழுத்திடப்படுவது இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நியாயமான சமூகத்திற்கா மக்கள் அமைப்பின் பேச்சாளர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கவனத்தில் கொண்டு நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக நாளைய தினம் வெளிநாடு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjqz.html

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம்: - ஐயப்ப மாலை அணிவிக்கும் நிகழ்வு - கிராம சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 08:18.07 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 12 பேர் டெங்கு தாக்கத்துக்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுச்சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பிரதேசத்தில் அதிகளவில் டெங்கு தாக்கத்துக்குள்ளானோர் செட்டிபாளையம் மற்றும் களுதாவளையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த டெங்கு தாக்கத்துக்கு உள்ளான ஒருவர் செட்டிபாளையத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி செட்டிபாளையம் பகுதியில் இதுவரையில் எட்டுப்பேர் டெங்கு தாக்கத்துக்குள்ளாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் களுதாவளைப்பகுதியில் சுமார் நான்கு பேர் டெங்கு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிருஸ்ணகுமாரிடம் கேட்டபோது,
செட்டிபாளையம் பகுதியில் ஏழு பேரும் களுதாவளை பகுதியில் ஒருவரும் டெங்கு தாக்கத்துக்குள்ளானதாக வைத்தியசாலை அறிக்கைகள் மூலம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செட்டிபாளையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருக்கு டெங்கு தாக்கம் உள்ளபோதிலும் அவரின் இரண்டு சிறு நீரகங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அத்துடன் டெங்கு தாக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் மரணித்ததாகவும் தெரிவித்தார்.
டெங்கு தாக்கம் உள்ள பகுதியில் விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான வகையில் காணிகளை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கிராம சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 48 பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள், அப்பிரதேச செயலகத்தில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 09ம் திகதி வாரம் கூழாவடி மதுபானச்சாலையின் உரிமையாளர் ஒருவரால் கிராம அலுவலகர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவரது கமெரா மற்றும் கையடக்கத்தொலைபேசியும் சேதமாக்கப்பட்டதாக தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும் அவருக்காக நியாயம் வேண்டியும் மேற்படி கிராம அலுவலகர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தங்களின் பிரிவுகளுக்கு சென்று கடமையாற்ற அச்சமாக உள்ளது என்று மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவித்துவிட்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக மேற்படி கிராம அலுவலகர்கள் கூறினர்.
இருப்பினும், அத்தியாவசிய தேவை கருதி பிரதேச செயலத்துக்கு வருவோருக்கு மட்டும் கடமையாற்றுவதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த கிராம சேவையாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
.

மட்டக்களப்பில் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இடம்பெற்றது.
தற்போது ஐயப்ப பக்த அடியார்கள் அனுஸ்டிக்கும் ஐயப்ப விரதம் நாடு பூராகவும் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
விரத பூசைகள் யாவும் சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ.எஸ்.உதயகுமார் குருக்கள் ஆகியோரால் இடம்பெற்றது. இங்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய பூசை பின்னர் அபிஷேகப் பூசை மற்றும் மாலை அணிவிக்கும் பூசையும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரால் விரத முறை பற்றி நற்சிந்தனை வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இம்மாதம் 17ம் திகதி தொடக்கம் தை மாதம் 15ம் திகதி வரை தினமும் மாலை 6 மணிக்கு கூட்டு வழிபாடு மற்றும் பூசைகள் என்பன இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq0.html
மாலக்க சில்வாவின் மேலும் 4 சகாக்கள் கைது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 08:46.36 AM GMT ]
கொழும்பு பம்பலப்பிட்டி இரவு நேர களியாட்ட விடுதியில் பிரித்தானிய தம்பதியை தாக்கிய சம்பவத்தின் போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வாவுடன் அதில் சம்பந்தப்பட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர், சமையல் நிபுணர், சிகையலங்கார நிபுணர் மற்றும் மாலக்க சில்வாவின் மெய்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் களனி, பன்னிப்பிட்டிய, குளியாப்பிட்டிய மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq1.html

இலங்கை கிரிக்கட் நிறுவனம் கொள்ளையர்களின் குகையாக மாற்றமடைந்துள்ளது: அர்ஜூன ரணதுங்க
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 08:50.40 AM GMT ]
இலங்கை கிரிக்கட் நிறுவனம் கொள்ளையர்களின் குகையாக மாற்றமடைந்துள்ளது என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான அஜர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கட் அணி விஜயம் மேற்கொண்டமை ஓர் பிழையான தீர்மானமாகும்.
இலங்கை அணி ஒருநாள் போட்டித் தொடரில் படு தோல்வி அடைந்தமைக்கான பொறுப்பினை விளையாட்டுத்துறை அமைச்சரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திட்டமிடாமல் போட்டித் தொடர்களில் பங்கேற்றக்கூடாது. இவ்வாறான தீர்மானங்களின் மூலமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஒர் வைக்கோல் பொம்மையாக செயற்படுகின்றார் என்பது வெளிச்சமாகின்றது.
இந்த போட்டித் தொடரின் மூலம் இலங்கைக்கு பணம் கிடைத்ததா? இலங்கை கிரிக்கட் நிறுவனம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அடிமையாகியுள்ளது என அர்ஜூன ரணதுங்க சாடியுள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmszBSbKYjq2.html

Geen opmerkingen:

Een reactie posten