[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:11.46 PM GMT ]
இது குறித்து நந்தன குணதிலக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குணதிலக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்து கொள்ளும் விடயத்தில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி நந்த முருத்தொட்டுவேகம, ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls0.html
யாழ் உயர்பாதுகாப்பு வலய மக்களின் காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் சூழ்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:16.10 PM GMT ]
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 6381 ஏக்கர் பொது மக்களுடைய நிலம் 2011ம் ஆண்டே சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 2013ம் ஆண்டே அளக்கப்பட்டதாக
மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வலி, வடக்கு மீள்குடியேற்ற குழு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் தலைவர் எஸ்.சஜீவன் கருத்து வெளியிடுகையில்,
வலி,வடக்கில் 6381 ஏக்கர் நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலத்தை 2011ம் ஆண்டு 05ம் திகதி 10ம் மாதம் ஜே.பி.கே.லியனகே, ஜீ.டீ.ஐ.கலாபாய, ஜீ.எச்.எம்.பெரேரா, டீ.எல்.யூ.குணசேகரா ஆகிய 4 நிலஅளவையாளர்கள் மூலம் மக்களுடைய நிலத்தை மக்களின் அனுமதியின்றி அளந்திருக்கின்றார்கள்.
பின்னர் 2013ம் ஆண்டு 06ம் மாதம் 05ம் திகதி காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டது. எனவே 2011ம் ஆண்டு அளவீடு செய்யப்பட்ட நிலத்தை 2013ம் ஆண்டு அளக்கப்போவதாக கூறப்பட்ட விடயம் பொய் என்பதுடன், இந்நடவடிக்கை மக்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளையும் ஏமாற்றுவதற்கான முயற்சியாகும்.
மேலும் முன்னர் அளவீடு செய்யப்பட்டதற்கு அமைவாக விளக்கப்படத்தினை தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இவ்வாறான சம்பவங்களின் மூலம் வலி,வடக்கு மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களுக்கு, திரும்ப முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றமை உண்மையாகும்.
இதேவேளை மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றாமல் அவர்களுடைய நிலங்களை சுவீகரிப்பு என்னும் பெயரில் அபகரித்து வரும் நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் அமைந்திருக்கும், காணிகளையும் படையினர் சுவீகரிப்பதற்கும், வலி, வடக்கில் காணி அற்ற குடும்பங்களை அங்கே குடியேற்றுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றது. இதற்கு படையினருடன் சேர்ந்து இயங்கும் சில தமிழர்களும் உடந்தையாக இருக்கின்றார்கள். குறித்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை யாழ்.குடாநாட்டின் மற்றைய பகுதிகளிலும் ஜனாதிபதியின் வருகையினையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காணி அளவீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்காக முன்னர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றி, அங்கே அதிகளாவான பொதுமக்களின் காணிகளை படையினருக்கு சுவீகரித்துக் கொடுத்த சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் எச்.டீ.ஏ.கல்தேரா என்பவர் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 10ம் மாதம் 13ம் திகதி 2014ம் ஆண்டு தொடக்கம், 31ம் திகதி 12ம் மாதம் 2014ம் ஆண்டு வரையிலான, காலப்பகுதிக்குள்
வலி,வடக்கு உட்பட யாழ்.குடாநாட்டில் படையினர் ஆக்கிரமித்திருக்கும் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை சுவீகரிக்க மிக கபடத்தனமான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகின்றது. எனவே மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
வலி,வடக்கு உட்பட யாழ்.குடாநாட்டில் படையினர் ஆக்கிரமித்திருக்கும் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை சுவீகரிக்க மிக கபடத்தனமான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகின்றது. எனவே மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls1.html
Geen opmerkingen:
Een reactie posten