தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு - மன்னார் ஆயர் கண்டனம்!

ரணில் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும்: பொன்சேகா யோசனை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 07:14.06 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார்.
மருத்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த பொன்சேகா இன்று காலை நாடு திரும்பினார்.
ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் அன்று முற்பகல் ரணிலிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்சேகாவின் இந்த யோசனையை சமகி சக்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் பொது வேட்பாளராக போட்டியிட மிகத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்க தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlqz.html
ஊழல், மோசடிகள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஏற்பட்டவை அல்ல: கோத்தபாய ராஜபக்ஷ
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 08:03.08 AM GMT ]
ஊழல், மோசடிகள் என்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை அல்ல என பாதுகாப்புச் செயலாளரான ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தத்தை போன்ற  பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதற்காக ஜனாதிபதியிடம் விட்டுச் செல்லப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்திலேயே சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலக குழுவினர் இருந்தனர்.
வெலே சுதா, கிம்புலாவல குணா, தெல் பாலா, ஐஸ் மஞ்சு போன்ற பல்வேறு பெயர்களில் பாதாள உலகத்தினர் செயற்பட்டு வந்தனர்.
இவர்கள் போர் நடைபெற்ற காலத்தில் தென் பகுதியில் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அவர்கள் தற்போது இல்லை.
போதைப் பொருள் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் சிரமப்பட்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
செயற்பட்டு ரீதியான நடவடிக்கைகள் மூலமே இவற்றை தீர்க்க முடியும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் இருப்பதால் மாத்திரம் பிரச்சினைகள் தீராது எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும் நமக்காக நாம் நிதியத்திற்காக சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதற்கான கணக்காய்வு அறிக்கையை கூட அவர் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
பாதுகாப்பு இரகசியங்களை வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்த கணக்காய்வு அறிக்கை வெளியிடப்படாது இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தவிர இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகவும் ஊழல், மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பலர் ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டனர்.
262 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சம்பவத்துடன் பிரதமரின் செயலாளர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இப்படியான சூழலில் பாதுகாப்புச் செயலாளரின் இந்த கருத்துக்கள் பாதூரமானவை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலக குழுக்களை அடக்குவதாக கூறி அரசாங்கத்திற்கு எதிரான பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் பலவேறு வழிமுறைகளில் கொலை செய்யப்பட்டனர்.
ஆனால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பில் இருக்கும் பாதாள உலக உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq2.html

முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு - மன்னார் ஆயர் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 09:00.15 AM GMT ]
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழருக்கு நீதியை, விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, இலங்கைப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் த.தே.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், 
மன்னார் - வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே.
இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு, பொறியியல் - நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq5.html

Geen opmerkingen:

Een reactie posten