[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 03:02.07 AM GMT ]
கடந்த நவம்பர் முதலாம் திகதி கொழும்பு, கிருலப்பனை இரவு விடுதியொன்றில் மாலக சில்வா மற்றும் வெளிநாட்டுத் தம்பதியினருக்கிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.
ஸ்கொட்லாந்து வெள்ளைக்கார பெண்ணொருவதை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மாலக சில்வா, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாலகவுடன் வந்திருந்த நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பி தாக்கியதில் ஸ்கொட்லாந்து பெண்ணின் காதலர் மற்றும் ஒரு ஜேர்மனி பிரஜை ஆகியோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் மாலக சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டின் பேரில் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் , அங்கிருந்து வெளியேற முடியாத வகையில் மாலகவை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சம்பவம் தொடர்பில் மாலக சில்வா இதுவரை அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மாலகவின் உடல்நிலை தேறியிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
மேலும் உடனடியாக மாலக சில்வாவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சட்டத்தரணி ஹேமந்த கோரிக் வைத்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் , வரும் 18ம் திகதி மாலக சில்வாவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும் குறித்த தினத்தில் சம்பவம் நடைபெற்ற இரவு விடுதியின் உரிமையாளர்கள் மாலகவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவு வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv0.html
ஜனாதிபதி அனைத்து இன மக்களுடனும் அன்பு கொண்டவர்: ஆளுனர் அலவி மௌலானா
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:06.23 AM GMT ]
அரச நிறுவனத்தின் சிங்கள பத்திரிகையான தினமிண பத்திரிகையின் இன்றைய வெளியீட்டுக்கு அலவி மௌலானா வழங்கியுள்ள நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
ஜனாதிபதி நாட்டின் அனைத்து இன மக்கள் தொடர்பிலும் கரிசனை கொண்டவர்.
அனைவரையும் சரிசமமாக நடத்தும் எண்ணம் கொண்டவர். அவரது ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக நடத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு அவர் சரிசமமான உரிமைகளை வழங்கியுள்ளார். ஒரே மாதிரியான அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார்.
தற்போது வடக்கு- கிழக்கு பிரதேச மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்துக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு- செலவுத்திட்டத்திலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு நலனை விட கட்சியின் நலன் முக்கியம்.
நாட்டு மக்களை விட அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தான் கரிசனை கொண்டிருப்பார்கள் என்றும் ஆளுனர் அலவி மௌலானா தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv2.html
மில்கோ நிறுவன ஊழியர்களுக்கு நிரந்திர நியமன கடிதம் வழங்கி வைப்பு!
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:37.22 AM GMT ]
மில்கோ நிறுவனத்தில் குறித்த ஊழியர்கள் பல வருட காலமாக தற்காலிகமாக கடமையாற்றி வந்தவர்களாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 வரவு செலவு திட்டத்தின் படி தற்காலிகமாக வேலை செய்த ஊழியர்களுக்கு நிரந்தரமாக வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் படி இந்த நிரந்தர நியமன கடிதம் வழங்கப்பட்டது.
அதேபோல் அம்பேவல மில்கோ நிறுவனம் தற்போது நவீன முறையில் அபிவிருத்தி செய்வதையும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சென்று பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.
தற்போது மில்கோ நிறுவனத்தின் கொள்ளளவு 110 ஆக இருப்பதாகவும் அபிவிருத்தியின் பின் 4 இலட்சமாக கூடும் எனவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் எல்லேகம தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv3.html
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கப்படுவதில்லை: பா.உ. சிறிதரன்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 05:12.24 AM GMT ]
ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் சுயாதீனமான முறையில் தங்களது கடமையை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் பொறுப்பு மிகவும் விசாலமானது.
எனவே ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிதரன் தெரிவித்துள்ளர்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv5.html
Geen opmerkingen:
Een reactie posten