தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

புலித்தடையை நீக்குவதற்கு கே.பி.யின் மருமகனே வழக்குத் தாக்கல் செய்தார்!- பாராளுமன்றில் ஜே.வி.பி. எம்.பி!

புலம்பெயர் தமிழர்களுடன் அராசங்கம் போராடுகின்றது! சஜின் வாஸ்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 03:50.20 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பதாக சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டாலும் அதன் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றது. எங்களது அரசாங்கம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களுடன் எதுவித தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பயங்கரவாதிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கூட புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களைச் சந்தித்திருந்தார்.
இன்று நம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவும், இந்தியாவும் நிதியுதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நிதி முழுவதும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே செலவழிக்கப்படுகின்றது.
நாட்டின் அபிவிருத்தி என்று வரும்போது நாங்கள் பூகோள அமைவிடம் பார்த்து முடிவுகள் எடுப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திக்கு யார் உதவியளித்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வோம். அது சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv1.html
புலித்தடையை நீக்குவதற்கு கே.பி.யின் மருமகனே வழக்குத் தாக்கல் செய்தார்!- பாராளுமன்றில் ஜே.வி.பி. எம்.பி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:38.17 AM GMT ]
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் புலிகள் மீதான தடையை நீக்­கு­வ­தற்­கான வழக்கை கே.பி. யின் அக்­காவின் மகளை திரு­மணம் செய்த மாப்­பிள்­ளையே தாக்கல் செய்தார் என நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் ஜே.வி.பி. கட்சியின் எம்.பி. விஜித ஹேரத் குற்றம்சாட்டினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற வரவு செல­வுத்­திட்டம் மீதான வெளி­வி­வ­கார அமைச்சு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் புலி­க­ளுக்கு எதி­ரான தடை நீக்­கப்­பட்­ட­தென்­பது இலங்­கையின் இறை­யாண்­மை­யுடன் தொடர்­பு­பட்­டது.
அதனை உள்­நாட்டு விவ­காரம். எனவே ஐரோப்­பிய ஒன்­றிய நீதி­மன்­றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்­வது நாட்டை காட்­டிக்­கொ­டுப்­ப­தென்­பது அரசின் வாதத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
புலி­களின் தடை நீக்­கத்தை எதிர்த்து அந்த நீதி­மன்­றத்தில் வாதா­டாது சும்மா இருந்து விட்டு இன்று கதை சொல்­கின்­றார்கள்.
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நீதி­மன்­றத்தில் புலி­களின் தடையை நீக்­கு­வ­தற்­கான வழக்கை தொடர்ந்­தவர் யார்?
கே.பி. யின் அக்­காவின் மகளை திரு­மணம் செய்த மாப்­பிள்ளை தான் இந்த வழக்கை தொடர்ந்­துள்ளார். 
அத்­தோடு புலித்­தடை நீக்­கத்தை அரசு தேர்­த­லுக்­கான பிர­சா­ர­மாக பாவிக்­கின்­றது. தமக்கு சாத­க­மாக உள்­ளதால் தடை நீக்­கத்தை எதிர்க்­க­வில்லை. உள்­நாட்டில் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக பேசி தம்மை தேசப்­பற்­றா­ளர்கள் எனக்­காட்­டிக்­கொள்ளும் அர­சாங்கம்.
இர­க­சி­ய­மாக அமெ­ரிக்­காவின் முப்­ப­டை­களும் எமது பூமியை படை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­கான ஒப்­பந்­தங்­களை செய்து கொண்­டுள்­ளது. இதுதான் அரசின் இரட்டை வேடம் தேசப்­பற்று.
எமது வெளி­வி­வ­கார அமைச்சு கௌர­வ­மிக்க அமைச்சாக இயங்கி வந்தது. ஆனால் இன்று எமது வெளிவிவகார அமைச்சு சொத்தி உபாலியின் கைகளில் சிக்கி கௌரவத்தை இழந்துள்ளது என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv4.html

Geen opmerkingen:

Een reactie posten