[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:13.15 PM GMT ]
உதய பெரேரா, 2012ம் ஆண்டு அமெரிக்க இராணுவ போர் கல்லூரியில் பயிற்சி பெற்று விருதும் பெற்றார்.
2009ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர், வெளிநாடுகளில் பயங்கரவாத தடுப்பில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவரின் பணிப்புரையின் பேரில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அருகில் இரண்டு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாச்சிமார் கோயிலடி மற்றும் கலட்டி சந்தி ஆகிய இடங்களிலேயே இந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் பல்கலைக்கழகத்தின் 500 மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ம் திகதியன்று பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாளை நினைவுகூருவர் என்ற அச்சத்திலேயே இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர, உதய பெரேராவினால், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள புலனாய்வு அதிகாரிகள் பலாலிக்கு அழைத்து வரப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்கும் முனைப்புக்கள் குறித்து பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இராணுவ வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்கலைக்கழக வீதியில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்புக்கள் வரும் என்பதால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இந்த தடவை மாவீரர் தின நாட்களில் மூட துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இணக்கம் வெளியிடவில்;லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் இந்த நாட்களில் பல்கலைக்கழகம் மூடப்பட்ட போது அரசரட்ணம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp7.html
மன்னாரில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை! பொய்யான தகவலை வெளியிடும் பொலிஸ்: பொதுமக்கள் ஆதங்கம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:53.08 PM GMT ]
கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரன் தொடர்பில் உண்மை தகவல்களை மறைக்க இலங்கையின் படையினரும் பொலிஸாரும் முயற்சித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நேற்று கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நகுலேஸ்வரன், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இதேவேளை நகுலேஸ்வரனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவரின் மனைவி, இரண்டு நாட்களுக்கு முன்னர் புதியவர்கள் இருவர் வந்து மிரட்டும் பாணியில் நகுலேஸ்வரனை விசாரித்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போருக்கு பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பல இளைஞர், யுவதிகள் மத்தியில் நகுலேஸ்வரனின் கொலை பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போராளியின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளிப்படத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்: ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
குறிப்பாக காணி அபகரிப்புகள், வளப்பங்கீடுகளில் பாரபட்சம், குளறுபடி போன்ற விடயங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மாவட்ட - பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கூட, அவர் தனது கிராம மக்கள் சார்பாக கலந்து கொண்டு பல்வேறுபட்ட பிரச்சினைகளை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தமையை நான் அவதானித்திருக்கிறேன்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkqy.html
Geen opmerkingen:
Een reactie posten