தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

முடிந்தால் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடியுங்கள்! பசில் சவால்!

அநீதி ஆட்சி நடத்தும் அரசுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: தேவரப்பெருமா, ரங்கா பண்டார
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:09.35 AM GMT ]
பொது மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளை பணத்திற்காக காட்டி கொடுக்க நாங்கள் தயார் இல்லை என்று புத்தளம் மாவட்ட பா.உ ரங்கே பண்டாரவும், களுத்துறை மாவட்ட பா.உ பாலித்த தேவரப்பெருமாவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்கள்.

இந்த இருவரும் ஐ.தே.க இருந்து ஆளும் கட்சிக்கு சென்றுவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என்றும் நீதிக்கு புறம்பாக ஆட்சி நடத்தும் தற்பொதைய அரசுடன் தாங்கள் ஒருபோதும் இணையமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs2.html



வடக்கு அதிகாரிகளுக்கு லஞ்ச, ஊழல் ஒழிப்புத் தொடர்பாக செயலமர்வு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:35.04 AM GMT ]
வட மாகாண அதிகாரிகளுக்கு லஞ்ச, ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலமர்வு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில்  இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வினை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் சார்ந்த தகவல்களை புலனாய்வு செய்வதறக்கான ஆணைக்குழு நடத்தியது.
இந்தச் செயலமர்வில் இலஞ்சம் அல்லது ஊழல் சார்ந்த தகவல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழவின் தலைவர் பால பெத்த பென்டி மற்றும் ஆணையாளர் விமலரட்ன, பணிப்பாளர் நாயகம் ஜெயந்த விக்கிரமரெட்ன ஆகியோருடன் லஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடற் பணிப்பாளர்கள், வட மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அரச உயர் அதிகாரிகளுக்கு இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs3.html
மகிந்தவுக்கு மூன்றாவது முறையும் முடியும்: உயர்நீதிமன்ற தீர்மானத்தை சபையில் சமர்ப்பித்த அமரதுங்க
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:44.25 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடையில்லை என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க இன்று நாடாளுமன்ற அவையில் சமர்பித்தார்.
நாட்டின் சகல பிரஜைகளும் அறிந்து கொள்ளும் வகையில் இதனைச் சபையில் சமர்பிப்பதாகவும் அவர் கூறினார்.
29 பக்கங்களை கொண்ட உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் வெளியிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறித்த அறிக்கை உண்மையான அறிக்கையா என்று ஆராய்ந்த பின்னர் அதனை அவை குறிப்பில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs4.html
திஸ்ஸ அத்தநாயக்கவை நிறுத்த ஐ.தே.க முயற்சி!
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:44.26 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் இணைந்துவிடக்கூடாது என்பதில் அந்தக் கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும்கட்சியினால் சுமார் 500 மில்லியன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி மாறுவார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் சுகவீனம் காரணமாக திஸ்ஸ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் கட்சி மாறுவதில்லை என்று உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் முயற்சியின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கட்சி மாறும் முடிவை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் தம்மை விட சஜித் பிரேமதாஸ, ரணிலின் செல்வாக்கை பெற்றிருப்பதே திஸ்ஸவுக்கு உள்ள பிரச்சினை என்று கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs5.html
ஐ.தே.கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக ரோஹன கமகே!
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:49.46 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரோஹன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வன்னி மாவட்டத்தில் பின்னடைவுகளை சந்தித்தது.
கட்சிக்கான ஆதரவை அதிகரித்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ரோஹன கமகே, ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
அத்துடன் அவர் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs6.html
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கே!
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 08:56.05 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய பிக்குகள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் இணை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியில் பௌத்த பிக்குகளை ஒன்று திரட்டி நாடு முழுவதிலும் உள்ள பௌத்த விஹாரைகளில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள் மூலம் மைத்திரிபாலவிற்கு ஆசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfs7.html
மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 09:14.34 AM GMT ]
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைகளில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி இரு கூறுகளாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமத்திய, வடமேல் உள்ளிட்ட நான்கு மாகாணங்கள் ஆளும் கட்சியின் பிடியை விட்டுச் செல்லக் கூடும் என நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfty.html

மைத்திரிபால சிறிசேனவுக்கு சேறு பூசும் கோத்தபாயவின் ஒப்பந்தத்தை ஏற்றுள்ள பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 09:22.09 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு சேறுபூசும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை பொதுபல சேனா பொறுப்பேற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த பொதுபல சேனா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அடிப்படையில் பொதுபல சேனா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால், நிறைவேற்ற முடியாத பல சிங்கள இனவாத நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை எதிரணியில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் ஏற்கப் போவதில்லை என்று அறிந்தும் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம் முன்வைத்த நிபந்தனைகளை மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்து விட்டதாக கூறி, எதிர்க்கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவி கிடைப்பதாக தெரிவித்து, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி மகிந்த ராஜபக்சவுக்கு சேவை செய்வதே பொதுபல சேனாவின் நோக்கம் என த இண்டிபெண்டன் இணையத்தளம் கூறியுள்ளது.
பௌத்த இனவாதத்தை தூண்டி வாக்குகளை அதிகரித்து கொள்வதே ராஜபக்ச அரசாங்கத்தின் கையில் இருக்கும் இறுதி துரும்புச் சீட்டாகும்.
இது சம்பந்தமாக கருத்து தகவல் வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே, தமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தமக்கு தொலைபேசி வாயிலான அறிய தந்ததாக தெரிவித்துள்ளார்.
மைத்திரி பேச்சுக்கு அழைத்துள்ளார்- பொதுபலசேனா
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுபலசேனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இதனை பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்திப்புக்காக பல அழைப்புக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மைத்திரிபாலவை சந்திப்பது குறித்து இன்னும் இறுதிமுடிவெடுக்கப்படவில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft0.html
முடிந்தால் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடியுங்கள்! பசில் சவால்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 09:18.20 AM GMT ]
எதிர்க்கட்சிகள் முடிந்தால் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும் என்று அமைச்சர் பசில் ராஜபகஷ சவால் விட்டுள்ளார்.
களனி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை ஆதரிக்க ஆளுங்கட்சியிலிருந்து பலர் கட்சி தாவ உள்ளதாக பெரும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும். இதனை நான் ஒரு சவாலாகவே விடுக்கின்றேன். எங்கள் கட்சியில் இருந்து தாவ இருக்கின்றவர்களை எடுத்துக் கொண்டு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுகின்றேன்.
ஆனால் இனி ஒருவர் கூட எங்கள் பக்கமிருந்து கட்சிதாவ மாட்டார்கள். ஆளுங்கட்சியை விட்டு வெளியேற யாரும் தயாராக இல்லை. என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRYKYftz.html

Geen opmerkingen:

Een reactie posten