[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 12:48.12 PM GMT ]
கல்லடி அரசாங்க விடுதி வீதியே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
இந்திய இராணுவம் இப்பகுதியில் தரித்திருந்த காலப்பகுதியில் மூடப்பட்ட இவ்வீதியானது பின்னர் இராணுவமுகாம் அமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மூடப்பட்டுவந்தது.
இந்த நிலையில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண படைத்தளபதி ஆகியோரிடம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதி திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் ஜோர்ஜ்பிள்ளை மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்தனர்.
இதன்போது படைமுகாம் அமைப்பதற்கு அமைக்கப்பட்ட முள்வேலிகள் மற்றும் வேலிகள் அகற்றப்பட்டு சிரமமான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டது.
அனைத்தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டில் கிரவல் இடும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இப்பகுதி மக்கள் நீண்டதூரம் பிரயாணம் செய்தே பிரதான வீதிக்கு செல்லும் நிலை இருந்துவந்தது. இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதால் விரைவாக தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfr1.html
கிறிஸ் நோனிஸின் உண்மையான முகம்: இணையத்தளங்களில் ஒலி வடிவில் பரபரப்பு.
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 01:04.37 PM GMT ]
பிரித்தானியர் ஒருவர் வீசா பெற விண்ணப்பித்துள்ளதுடன் அவரது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள குறித்த பெண் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரிதொரு அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த பெண், கிறிஸ் நோனிஸை தொடர்பு கொண்டு விடயத்தை கூறிய போது கடுப்பாகி போன நோனிஸ் பெண்ணை கடுமையாக சாடி பேசுவது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூதரகத்தில் பணியுரியும் பெண் அதிகாரி ஒருவரை தன்னை தொடர்பு கொள்வதற்கு முன் ஏன் தொடர்பு கொண்டு பேசினாய் எனக் கூறி நோனிஸ் பெண்ணை கடுமையாக சாடுகிறார்.
இறுதியில் தனபால என்ற அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கடவுச்சீட்டு தயாரா என்று வினவி விட்டு தன்னை மீண்டும் தொடர்பு கொள்ளுமாறு நோனிஸ் அந்த பெண்ணிடம் கூறுகிறார்.
அதன் ஒலி வடிவம்,
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfr2.html
ஐநா விசாரணை: இலங்கையைச் சாடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையர்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 02:18.31 PM GMT ] [ பி.பி.சி ]
இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஐநாவின் புலன் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது மற்றும் மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகள், ஐநா சாசனத்தை நிலைநிறுத்த விளையும் ஐநாவின் உறுப்பு நாடு என்ற வகையில் ஏற்க முடியாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியதாக பரந்துபட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்களும், மனித உரிமைக் காவலர்களும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
அங்கு உருவாக்கப்பட்டுள்ள பயத்தினாலான சுவரானது, ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மக்கள் சாட்சியமளிப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தடுக்கிறது என்றும் ஆணையர் கூறியுள்ளார்.
இந்த விசாரணை நேர்த்தியற்றது என்றும், பாரபட்சமானது என்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐநா ஆணையர் தவறு என்று கூறி நிராகரித்துள்ளார்.
ஆகவே இந்த விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தம்முடன் ஒத்துழைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfr3.html
Geen opmerkingen:
Een reactie posten