தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

மக்களோடு மக்களாக சாலையில் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம்


சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்தை நிறுத்தாமல், சைரனை ஒலிக்காமல், மக்களோடு மக்களாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானதால் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுள்ளார்.
முதல் முறை முதல்வராக இருந்தபோதே ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்பாடுகள், அமைதி ஆகியவற்றத்தால் பலரையும் வசீகரித்த பன்னீர் செல்வம், தற்போது 2வது முன்பை விட அடக்கஒடுக்கமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை காமராஜர் சாலையில் மக்களோடு மக்களாக காரில் வந்த காட்சியைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
ஏனெனில் முதல்வர் கார் செல்வதற்காக பொலிசார் எந்த கார்களையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.newindianews.com/view.php?24AMec03dOyde21mKbb2m0Med3Q4S0c3ADh244Al12236AS3

Geen opmerkingen:

Een reactie posten