தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

கடத்தியவர்களை தந்தால் வாக்களிப்போம்: சந்தியா எக்னேலிகொட

வடக்கு முதல்வர் உட்பட அனைவரையும் விமர்சித்து மொட்டைக் கடிதங்கள்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 10:38.38 AM GMT ]
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன செலவீனம் 1876 மில்லியன் ரூபா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி நிதி விடயம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சபையில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண சபைக்கு 19481 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் மீண்டுவரும் செலவீனம் மற்றும் எமது நிதி கையாளுகைக்குட்பட்ட 1876 மில்லியன் உள்ளடங்கலான 15,526 மில்லியன் ரூபா நிதி மட்டுமே மாகாண சபையின் நிதி கையாளுகைக்கு உட்பட்டிருக்கின்றது.
மீதமாகவுள்ள 3955 மில்லியன் ரூபா நிதி எமது நிதி கையாளுகைக்குட்பட்டதல்ல.  அந்த நிதி மாகாண சபையின் திறைசேரிக்கு ஊடாக ஒதுக்கப்படாமல் நேரடியாக திணைக்களங்களுக்கே ஒதுக்கப்படுகின்றது.
இந்த நிதியில் வடமாகாண சபையினர் அல்லது மாகாணசபை அதிகாரிகள் தலையீடு செய்ய முடியாத வகையில் சட்டம் இருக்கின்றது.
இந்நிலையில் வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிடவில்லை. எனவும் முன்வைக்கபடும் குற்றச்சாட்டுக்கள்,
பொருத்தமற்றவை என அவைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான விமர்சனங்களை முன் வைப்பவர்கள், மாகாணசபையின் ஆளும் தரப்பினராகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு ஆட்சியை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள் என மக்களுக்கு காண்பிக்க நினைக்கின்றார்கள்.
ஆனால் அவ்வாறான விமர்சனங்களில் உண்மையில்லை என்பதுடன், எமக்கு ஒதுக்கப்பட்ட மூலதன ஒதுக்கீட்டு நிதியினை இவ்வருட இறுதிக்குள் அரச நிதி கையாளுகை நியமங்களுக்கு அமைய செலவிட்டு முடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர், அவைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியேரை விமர்சித்து மொட்டைக் கடிதங்கள் தமக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் விமர்சகர்கள் தங்களை முதலில் அடையாளப்படுத்திக் கொண்டு உண்மையானதும், நேர்மையானதுமான விமர்சனங்களை முன்வைத்தால் அது இரு பகுதியிருக்கும் நன்மையளிக்கும் எனவும் கூறியிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgpy.html
துறைமுக சமையல் அறைக்கு உணவு விநியோகம்! பாரிய தரகு வியாபாரம் அம்பலம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 10:21.09 AM GMT ]
துறைமுகத்தில் உள்ள சமையலறைக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதில் பாரிய தரகு வியாபாரம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
துறைமுகத்தின் சமையல் அறையில் தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான சோறு பொதிகளுக்கான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உணவை தயாரிக்க விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் தினமும் குறைந்தது 5 லட்சம் ரூபா வரையான தரகு பணத்தை பெறுதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
முறைகேடான கோரப்படும் விலை மனுகோரல் மூலம் இந்த மோசடி நடைபெறுகிறது.
விலை மனுக்கான ஒப்பந்தங்களை பெறும் நபர்கள் துறைமுக அதிகாரிகளுக்கு வீடு, வாகனங்கள் போன்றவற்றை கூட பரிசாக வழங்குவதாக தெரியவருகிறது.
துறைமுக சமையல் அறைக்கு தினமும் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களில் ஒரு கிலோ என்ற கணக்கில் தரகு பணம் பெறப்படுகிறது.
6 ஆயிரம் கிலோ அரிசிக்கு – 15 ரூபாய்,ஆயிரத்து ஐநூறு கிலோ மீன்  – 75 ரூபாய் , ஆயிரம் கிலோ இறைச்சிக்கு – 80 ரூபாய் , 800 தேங்காய்களுக்கு– 12 ரூபாய், 800 கிலோ கிராம் காய்கறிகளுக்கு – 15 ரூபாய் , 500 கிலோ தேங்காய் எண்ணெய்க்கு – 20 ரூபாய் ,450 கிலோ கிராம் உருளை கிழங்குக்கு – 20 ரூபய் , 100 கிலோ கிராம் வெங்காயம் – 15 ரூபாய் , 250 கிலோ கிராம் பருப்புக்கு – 15 ரூபாய் என்று  தரகு பணம் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo7.html
கடத்தியவர்களை தந்தால் வாக்களிப்போம்: சந்தியா எக்னேலிகொட
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 10:06.21 AM GMT ]
வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் கணவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தேடியறியும் தேவை அவர்களின் குடும்பங்களுக்கு இருப்பதாக சந்தியா எக்னேலிகொட தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
போருக்கு பின்னரான காலத்தில் வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் சம்பந்தமாக இதுவரை சரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு தரப்பினர் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட போதும் அந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
இந்த அநீதிக்கு உள்ளான குடும்பங்களின் பிள்ளைகள், பெற்றோர், மனைவிமார் பெரும் அசௌகரிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடி பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் உறவினர்கள் அவமதிப்புக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை கொடுத்தால் மாத்திரமே இதற்கு பதில் கிடைக்கும். காணாமல் போனவர்களை தேடும் குடும்ப உறவினர்களை கொல்லாமல் கொன்று பலி வாங்கி வருகின்றனர்.
இதுதான் நாங்கள் இன்று எதிர்நோக்கும் நிலைமை.
இதனால், வாக்கு கேட்டு வருபவர்களிடம் கடத்தியவர்களை தந்தால், வாக்களிப்பதாக கூறுங்கள் எனவும் சந்தியா எக்னேலிகொட குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo6.html

Geen opmerkingen:

Een reactie posten