ஆனால் இப்போது முஸ்லிம் இளைஞர்களால் தானாகத் தேடிக் கொண்ட கலவரத்தால் மீண்டும் பேருவளைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அளுத்கம தர்கா நகரில் மீண்டும் பதற்றம்
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கிடையிலான மோதலை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தர்கா நகர் முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று கடந்த சனிக்கிழமையன்று பக்கத்து ஊரான பதிராஜகொட என்னும் ஊரில் உதைப் பந்தாட்டப் போட்டியொன்றில் பங்குபற்றி வெற்றியும் அடைந்துள்ளார்கள்.
வெற்றியீட்டிய முஸ்லிம் இளைஞர் குழுவினர் திரும்பி வரும் வழியில் சிங்கள இளைஞர் ஒருவர் பதிராஜகொட விகாரைக்கு அருகில் முஸ்லிம் இளைஞர் குழுவை இடைமறித்து தகராறு பண்ணியுள்ளார்.
அங்கு வாய்த்தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு இனக்கலரமே ஏற்பட்டுள்ளது.
இதன் போது அவ்வழியே வந்த முஸ்லிம் பெண்மணியொருவர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது விகாரையின் மணி தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டு சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
சிங்களவர்கள் அதிகளவு வருவதைக் கண்ட முஸ்லிம் இளைஞர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலை தெறிக்க அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளார்கள்.
எனினும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் பைசிக்களை விட்டு விட்டு ஓடியுள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னர் தர்கா நகருக்குள் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்துள்ளார்கள்.
எனினும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சம்பவத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென்று சொல்லப்படுகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணியைப் பார்வையிட இன்னும் யாரும் அனுமதிக்ப்படவில்லையென்றும் சொல்லப்படுகின்றது.
இதன் காரணமாக தர்கா நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தர்கா நகர் மற்றும் பேருவளைப் பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் மக்கள் பீதியில் உள்ளார்கள்.
முஸ்லிம் இளைஞர்கள் தானாகத் தேடிக் கொண்ட கலவரம்
ஏற்கனவே நடந்த மோதலின் வடுக்களும் காயங்களும் இன்னும் ஆறாத நிலையில் சிங்களப் பகுதியில் உதைபந்தாட்டம் ஒன்று தேவைதானா. இந்த உதைபந்தாட்டம் நடக்கவில்லையென்று யார் அழுதார்கள்.
முஸ்லிம் இளைஞர்கள் தங்களது கையைக் காலை சும்மா வைத்திருந்தால் இந்த இனக் கலவரம் நடந்திருக்குமா. இப்போதைய நிலையில் சிங்கள முஸ்லிம் இன உறவு நல்ல நிலையில் உள்ளதா?
பொதுபல சேனா விதைத்துள்ள முஸ்லிம் விரோதத் தீ சிங்கள இளைஞர்களின் நாடி நாளம் உடம்பில் ஊறிவிட்டது. இப்படிபட்ட நிலையில் முஸ்லிம்தான் துச்சர்களைக் கண்டால் தூர விலகுவது போன்று நடக்க வேண்டும்.
முஸ்லிம்களைத் தானாக வம்புக்கு இழுத்து பாரிய இனக் கலவரமொன்றுக்கு தயாராகவே உள்ளார்கள். இவைகளை மேற்குத் தெற்கு முஸ்லிம்கள் நன்றாக உணர வேண்டும்.
இரண்டு தேசியத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இனக்கலவரமொன்று ஏற்படுத்தப்படலாம். முஸ்லிம்கள்தான் நாட்டு நிலமைகளைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
சிங்களவர்களோடு ஒட்டி உறவாடும் நிலமை சற்றுக் குறைந்துள்ளது. சிங்கள களியாட்டங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றை முடியுமானவரை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்வது சிறப்பாகும்.
சிங்கள விழாக்களில் முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களை கேலி செய்வது மற்றும் ஜோக் அடிப்பது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பது மேலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது.
சேலையில் முள்ளுப்பட்டாலும் முள்ளின் மேல் சேலை பட்டாலும் சேலைக்குத்தான் சேதம் என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.
இதில் முட்டாள்தனமான வீரம் பேசிப் பயன் இல்லை. ஒரு சிங்கள வாலிபருடன் முஸ்லிம் ஒருவர் மோதுவது என்பது அரசுடன் மோதுவது போன்றது. அந்தளவு அரசு உள்ளது.
சிங்கள இளைஞர்களுடன் சோந்து கொண்டு கிரிக்கட் விளையாடுவது உதைபந்தாட்டம் விளையாடுவது போன்ற அத்தனை விளையாட்டு நிகழ்ச்சிகளையும் மற்றும் ஏனைய களியாட்ட நிகழ்ச்சிகளையும் முஸ்லிம் இளைஞர்கள் முற்றாகத் தவிர்ப்பது முஸ்லிம் இனத்திற்குச் செய்யும் பேருதவியாகும்.
பாரிய இனக்கலவரத்திற்குத் திட்டம்
நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாரிய இனக்கலவரமொன்றுக்கு சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்க வேண்டிய அபாயத்தில் உள்ளார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றும் போது 1915,1958,1983ம் ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவரங்களை விட மிகவும் பாரிய கலவரத்தைச் சிலர் நடத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்று பகிரங்கமாகவே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தக் கலவரத்தை தடுப்போம் என்றோ அல்லது எனது ஆட்சியில் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன் என்றோ ஜனாதிபதி சொல்லவில்லை என்பதை உற்று நோக்க வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியின் இனக்கலவர எச்சரிக்கையை நாம் வெறும் எச்சரிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. அரசுக்கு எதிரான அதிர்வுகள் சூடு பிடிக்குமானால் இனக்கலவர சூடும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஐ.தே.க வின் ஆதரவைக் குறைக்கத் திட்டம்
ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தினால் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்.
அதனால் ரணில் சிங்கள மக்களுக்கு எதிரானவர் என்ற புரளியை ஏற்படுத்தலாம் என்று அரசு எதிர்பார்க்கின்றது. அது போலவே ரணில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஊவா மகாணத் தேர்தலில் அரசுக்கு மரண அடி விழுந்துள்ளது. அரசு சரிவினைச் சந்தித்துள்ளது. அந்தச் சரிவினை அரசு சரிசெய்ய வேண்டிய தேவையுள்ளது.
இப்போது சிங்கள மக்கள் மத்தியில் ஐ.தே.க. வுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அரசுக்கு ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது.
மேல்.தென் மாகாணங்களில் அரசு இழந்த வாக்குச் சரிவை இனக்கலவரத்தின் மூலம் சரி செய்யப் பார்க்கின்றது.
முஸ்லிம்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் இனக்கலவரத்தை மூட்டி அரசு தனது வாக்கு வங்கியை அதிகரிக்கப் பார்க்கின்றது எனலாம்.
மற்றது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து அடிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்கதையாக தொடரக் கூடிய நிலைதான் உள்ளது.
இது உண்மை என்பது போலவே எமது நடவடிக்கை தொடரும் என்று பொதுபல சேனாவின் இணைப்பாளர் டிலந்த விதானகே பகிரங்கமாகவே ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார்.
ஆக இன்னும் பல தாக்குதல்களையும் இன வன்செயல்களையும் நடக்கத்தான் போகின்றது.
அதன் பெறுபேறுகளை நாம் எதிர்வரும் இரண்டு தேசியத் தேர்தல்களில் அறியலாம். இந்த இனக் கலவரத்தின் மூலமாக அரசின் மிகவும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ரணிலின் ஆதரவு பெருகுவதை தடுக்கவும் அரசுக்கான ஆதரவைப் பெருக்கவும்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அதன் பெறுபேறுகளை நாம் எதிர்வரும் இரண்டு தேசியத் தேர்தல்களில் அறியலாம். இந்த இனக் கலவரத்தின் மூலமாக அரசின் மிகவும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ரணிலின் ஆதரவு பெருகுவதை தடுக்கவும் அரசுக்கான ஆதரவைப் பெருக்கவும்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதலகள் மேற்கொள்ளப்பட்ட போது ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார்.
எந்தவொரு முஸ்லிம் எம்.பிக்களோ அல்லது அமைச்சர்களோ பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற போது வாயே திறக்கில்லையே.
இப்போது முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியை வெல்ல வைப்பதில் அதிக கரிசனை காட்டி வருகின்றது.
-எம்.எம்.நிலாம்டீன்.
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo5.html
Geen opmerkingen:
Een reactie posten