தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

மரண தண்டனை பெற்ற மீனவர்கள் தொடர்பிலான மனு நிராகரிப்பு!!

மஹிந்தவின் முட்டாள்தனம் பற்றி ரணில் விளக்கம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 01:47.56 PM GMT ]
மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழக்கொன்றை தாக்கல் செய்யாது, உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை தீர்ப்பை கோரியிருப்பது பெரிய முட்டாள்தனம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
தான் மகிந்த ராஜபக்ஷ இடத்தில் இருந்திருந்தால் அப்படியான கேள்வியை கேட்டிருக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் கருத்து கேட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தனக்கு 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு நுகேகொடையில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார். அவர்  மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புச் சட்டத்தின் 129 வது சரத்துக்கு அமைய ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் மீண்டும் போட்டியிடலாமா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.
நான் மகிந்த ராஜபக்ஷவாக இருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டேன்.
போட்டியிட முடியாமைக்கான காரணத்தை முன்வைக்குமாறு சரத் என் சில்வா போன்றவர்களுக்கு நான் சந்தர்ப்பம் கொடுத்திருப்பேன்.
என்னால் போட்டியிட முடியும் என்பதே என நிலைப்பாடாக இருக்கும். எனினும் மகிந்த ராஜபக்ஷ, சரத் என் சில்வா பிரச்சினையை கிளப்பும் முன் அவரை தன்னால் போட்டியிட முடியுமா என உயர்நீதிமன்றத்தின் கருத்தை வினவியுள்ளார். இது முட்டாள்தானமான வேலை இது செல்லுப்படியற்றது எனவும் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgv7.html
கொஸ்லாந்த வீதியில் பாரிய வெடிப்பு
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:36.50 PM GMT ]
கொஸ்லாந்த, பூணாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ம் மற்றும் 4ம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgwy.html
மீரியாபெத்தையில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இந்தியாவில் கல்வி!- இந்திய உதவி உயர்ஸ்தானிகர் உறுதி
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:53.58 PM GMT ]
கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய வம்சாவளிகள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்திய கண்டி உதவி உயர்ஸ்தானிகர் ஏ நடராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று மீரியாபெத்த அனர்த்த இடத்துக்கு விஜயம் செய்த அவர்ää அங்குள்ள மக்களை கண்டு ஆறுதல் கூறினார்.
அத்துடன் பதுளை மாவட்ட அரசாங்க அதிபருடன் அவர் நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்ää மண்சரிவின் பின்னர் அயல்நாட்டு உதவிகள் அவசியம் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும் இந்திய வம்சாவளிகள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உண்டு.
எனவே இலங்கை கோரியுள்ள அவசர உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
இந்தநிலையில் ஏற்கனவே இந்தியாவின் வீடமைப்பு திட்டங்களில் 2000 வீடுகள் பதுளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் சில வீடுகளை மீரியாபெத்தைக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
அதிலும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீடுகளை கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளமையால் அதனைப்பொறுத்தும் தீர்மானங்கள் அமையும்.
இதனை தவிர பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் கல்வியை தொடர இந்தியா நிச்சயம் உதவியளிக்கும்; என்றும் நடராஜன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgwz.html
மங்கள,அரசாங்கத்தில் இணைவது உறுதியில்லை! மங்களவும் சரத்தும் சிங்கப்பூரில் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 03:10.51 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்க கட்சியில் இணையும் தி;ட்டம் இன்னும் உறுதியாகவில்லை.
இந்தநிலையில் மங்கள சமரவீரவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சிங்கப்பூரில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
சரத் பொன்சேகாவின் வெளிநாட்டு பயணத்தடை நேற்று நீதிமன்றத்தினால் நீக்கப்பட்ட பின்னர் அவர் தமது குழு ஒன்றுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அதேநேரம் மங்கள சமரவீரவும் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அவர் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் மங்கள மற்றும் சரத் ஆகிய இரண்டு தரப்புக்களும் பேச்சு நடத்தவுள்ளன
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw0.html
மரண தண்டனை பெற்ற மீனவர்கள் தொடர்பிலான மனு நிராகரிப்பு!
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 04:12.50 PM GMT ]

இலங்கை இந்திய கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரப்பட்ட மனுவை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நிராகரித்தது.
இந்த மனுவை சட்டத்தரணி ஆனந்தமுருகன் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையில் போதைவஸ்து குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த ஐந்துபேரையும் தமிழகத்துக்கு மாற்றக்கோரும் மனு அடிப்படையற்றது என்று தெரிவித்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் மனுதாரர் தமது மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw1.html

Geen opmerkingen:

Een reactie posten