தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

சென்னையில் முத்தப் போராட்டம்! (படங்கள் இணைப்பு)!


சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ரெஷ்டாரென்ட்டில் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களது சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்தச் செயலை கண்டித்துக் கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து இதே போன்ற போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. தற்போது சென்னையிலும் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பாக சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்தக் கலாச்சாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றும் கூறினார்.


16 Nov 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1416132095&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten