தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைக்கு உதவ தயார்: ஜனாதிபதி



முல்லைத்தீவு ஏ9 வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி: மூவர் படுகாயம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 02:15.19 PM GMT ]
முல்லைத்தீவு ஏ-9 வீதி பனிக்கங்குளத்தில், இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி சுமார் 75 மீற்றர் வரை புரண்டு சென்றதால், காரில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மாங்குளப் பொலிஸார் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp6.html
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைக்கு உதவ தயார்: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 02:17.34 PM GMT ]
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வெளிநாட்டு அந்திய செலவாணியை ஈட்டி தரும் பிரதான துறையாகவும் நாட்டிற்கு தேவையான பொருளாதார தேவையை நிறைவேற்றும் முக்கியமான துறையாகவும் வெளிநாட்டு வேவைவாய்ப்பு துறை இருந்து வருகிறது.
அதேவேளை வெளிநாடுகளுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய நாட்டின் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp7.html

Geen opmerkingen:

Een reactie posten