தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

மீனவர் விவகாரம்: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

மகிந்தவை எதிர்த்து போட்டியிடும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்!– ரணில் – சந்திரிக்கா பேச்சு
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 12:36.12 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை நிறுத்துவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் இது சம்பந்தமாக இன்று காலை விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடாது ராஜபக்சவை எதிர்க்கும் சகலரும் ஏற்கக் கூடிய பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp3.html

கிளி.கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர் பணிமனை திறப்பு
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 12:41.08 PM GMT ]
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர் பணிமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் மாணவர்களின் நன்மை கருதி, கடந்த வருடம் அங்கு புதிதாக இராமகிருஸ்ண வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வித்தியாலயத்தில் பௌதீக வளக்குறைபாடுகள் காணப்படும் நிலையில், கிராம மக்கள், அதிபர் ஆகியோரின் முயற்சியினால் மெல்ல புதிய வளங்களை பெறப்படுகின்றது.
இந்த நிலையில், வடமாகாண சபையின் சிறு திட்ட நிதியினூடாக வலயக் கல்விப் பணிமனையின் மேற்பார்வையின் கீழ், பெற்றோர்களின் பங்களிப்புடன் கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் பாடசாலைக்கான அதிபர் பணிமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பள்ளியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் கலந்து கொள்ள, கரைச்சி கோட்ட கல்வி அதிகாரி அமிர்தலிங்கம், கிளிநொச்சியின் பாடசாலைகளான இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, அன்னை சாரதா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம், செல்வாநகர் அ.த.க.பாடசாலை, விவேகானந்தா வித்தியாலயம் உள்ளிட்ட பள்ளிகளின் முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் பள்ளி முதல்வர் இராசேந்திரம், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
புதிய அதிபர் பணிமனையை கிளி இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை அதிபர் சின்னத்தம்பி திரவியம் திறந்து வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp4.html

மீனவர் விவகாரம்: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 12:50.30 PM GMT ]
போதை பொருள் கடத்தியதாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இலங்கை அரசை கணடித்தும், தமிழக மீனவர்களை விடவிக்ககோரியும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது,
தமிழக மீனவர்கள் 5 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதே போல இலங்கை தமிழ் போராளிகள் 3 பேர் மீதும் பொய் வழக்கு போட்டு சிறை பிடித்து உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில் தவறு நடந்திருப்பதாக இந்திய உளவுதுறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
1976–க்கு பிறகு அங்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுவது முறையற்றது தான். ஆனால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதால் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு ராஜபக்சேயுடன் நெருக்கமாக இருக்கிறது. இதனால் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ராஜபக்சேவை வரவழைத்து பேச வேண்டும். தூதரையும் அனுப்பி பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் மத்திய அரசு தான். வருகிற 7ம் திகதி தங்கச்சி மடத்திலும் மீனவர்களை விடுவிக்க கோரி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். உணர்வுகளை புண்படுத்தி வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறார். ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அந்த விருதை பெற்றவர்களுக்கு இது அவமதிப்பை ஏற்படுத்துவதாகும். அவரை பாரதீய ஜனதா கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgp5.html

Geen opmerkingen:

Een reactie posten