[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 03:03.19 PM GMT ]
இலங்கையின் ராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த பொதுவேட்பாளர், அனைத்து எதிர்க்கட்சிகளின் காத்திரத்தை பெற்றிருக்க வேண்டும்.அத்துடன் எதிர்க்கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் மதிப்பை கொண்டிருக்க வேண்டும்.
அதேநேரம், குறித்த பொதுவேட்பாளர் ஏற்கனவே பெருமளவு வாக்கு வங்கியை கொண்டிருக்க வேண்டும்.
இந்தநிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் 40வீத வாக்கு வங்கியை கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியே பொதுவேட்பாளர் நிலைக்கு பொருத்தமான வேட்பாளரை கொண்டிருக்கிறது என்பது யதார்த்தம்.
எனவே பொதுவேட்பாளருக்கு, ஜே.வி.பினர், ஜாதிக ஹெல உறுமயவினர், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மாதுலவேவ சோபித ஆகியோரின் முழுமை ஆதரவு கிடைக்கவேண்டும் என்றும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
எனவே பொதுவேட்பாளருக்கு, ஜே.வி.பினர், ஜாதிக ஹெல உறுமயவினர், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மாதுலவேவ சோபித ஆகியோரின் முழுமை ஆதரவு கிடைக்கவேண்டும் என்றும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfw5.html
சூழ்ச்சி மூலம் மூன்றாம் தவணைக்கான ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த போட்டியிடுவார்!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 03:49.29 PM GMT ]
ஏற்கனவே கடந்த வார ஆரம்பத்தில் 18வது அரசியல் அமைப்பின் கீழ் மூன்றாம் தவணை போட்டிக்கான சட்டவிளக்கத்தை ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த இரகசிய சட்டவிளக்கம் பெரும்பாலும், நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கப் பெற்று, அதனை சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
18வது அரசியல் அமைப்பின்கீழ் உண்மை விவாதத்தின்படி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாம் தவணைக்கு போட்டியிட முடியாது. ஏனெனில் இரண்டாவது தடவையாக பதவியேற்ற போதே அவர், முன்னைய சட்டத்தின்படி எதிர்கால ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடும் தகுதியை இழந்து விட்டார்.
இந்தநிலையில் அவர் இரண்டாம் தவணை பதவிக்கு வந்த சில காலத்திலேயே 18வது திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே மஹிந்த மூன்றாம் தடவை போட்டிக்கு தகுதியற்றவர் என்று வலுவான வாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்த வாதத்தை முறியடித்து மூன்றாம் தவணையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஜனாதிபதி மிகப்பெரிய சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
இதனையே ஜனாதிபதியின் சட்டவிளக்கம் நகைச்சுவை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் கூறுகிறது.
சட்டரீதியாக மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாம் தவணையில் போட்டியிட முடியாது.
எனினும் மகிந்தவின் நண்பரான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஏற்கனவே மகிந்தவுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிரதம நீதியரசர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சில காலத்துக்கு முன் சந்தித்தமை மற்றும் ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயத்தின்போது இணைந்துக்கொண்டமை என்பனவற்றை கொண்டு ஊகிக்க முடிந்துள்ளது.
எனவே மொஹான் பீரிஸின் தீர்ப்பை கொண்டு மஹிந்தவினால் தடையின்றி மூன்றாம் தவணை பதவிக்காகவும் போட்டியிட முடியும்.
தற்போது மகிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரி தாக்கல் செய்துள்ள சட்டவிளக்கத்தை விசாரணை செய்த குழுவில் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட ஏழு பேர் நீதியரசர்கள் அடங்கியிருந்தனர்.
இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய வேண்டுமென்றால், அதனை விசாரணை செய்வதற்கு குறைந்தபட்சம் 5 நீதியரசர்கள் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட வேண்டும். எனினும் இலங்கையில் தற்போது உயர் நீதிமன்றத்தில் 11 நீதியரசர்களே இருக்கின்றனர். அதிலும் அவர்களில் ஒருவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்.
ஏனைய 10 பேரில் ஏழு பேர் ஏற்கனவே சட்டவிளக்க விசாரணைக்குழுவில் அங்கம் வகித்தமையால், மிகுதியாகவுள்ள 3 நீதியரசர்களைக் கொண்டு மேன்முறையீட்டுக்கான நீதியரசர் குழுவை அமைக்க முடியாது. எனவே இந்த வழக்கில் இயல்பாகவே மேன்முறையீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். மகிந்த ராஜபக்ஷ சட்ட விரோதமான முறையில் மூன்றாம் தவணையும் போட்டியிடுவதை தவிர்க்க முடியாது என்று இணைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfw6.html
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இனச் சாயம் கொண்டு பார்க்க வேண்டாம்!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 04:12.41 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த கோரிக்கை குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்முனைப் பிரதேசத்துக்கு தனி நிருவாக மாவட்டம் கேட்பதற்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை காண முடிகின்றது. இதில் உண்மையும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தமது கருமங்களை சிங்களத்தில் செய்து கொள்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன.
இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.
இதற்கு நிருவாக ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமும் ஆகும்.
இந்தக் கோரிக்கையை இனச் சாயம் கொண்டு பார்க்க முற்பட கூடாது. இந்த நாட்டைக் கூறு போடவும் எத்தனிக்கக் கூடாது.
இன்னும் இந்த நாட்டில் பல்வேறுபட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் உள்ளன எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfw7.html
Geen opmerkingen:
Een reactie posten